• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, May 11, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இந்திய செய்திகள்

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கின்றார் விஜய்!

Bharathy by Bharathy
May 6, 2026
in இந்திய செய்திகள்
0
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கின்றார் விஜய்!
Share on FacebookShare on Twitter

தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார்.

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) தலைவர் விஜய், இன்று ஆளுநர் ராஜேந்திர அர்லேகரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

இன்று பிற்பகல் 3.30 மணி அளவில் கிண்டி ஆளுநர் மாளிகைக்குச் சென்ற விஜய், ஆளுநர் ராஜேந்திர அர்லேகரைச் சந்தித்தார். இதன்போது அவருக்கு ஆளுநர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

தனது கட்சி சட்டமன்றத்தில் தனிப்பெரும் கட்சியாக உள்ளதைச் சுட்டிக்காட்டி, ஆட்சி அமைக்க அனுமதி கோரும் அதிகாரப்பூர்வ கடிதத்தை விஜய் ஆளுநரிடம் சமர்ப்பித்தார்.

இந்தச் சந்திப்பின் போது கட்சியின் முக்கிய நிர்வாகிகளான செங்கோட்டையன், ஆனந்த், ஆதவ் அர்ஜுனா மற்றும் நிர்மல்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

சமீபத்தில் நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான த.வெ.க 108 தொகுதிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. தமிழகத்தில் ஆட்சி அமைக்க 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

த.வெ.க-வுக்குத் தேவையான கூடுதல் ஆதரவை வழங்க காங்கிரஸ் (5 இடங்கள்), சிபிஐ (2), சிபிஎம் (2) மற்றும் விசிக (2) ஆகிய கட்சிகள் முன்வந்துள்ளதால், விஜய்யின் பலம் 119 ஆக உயர்ந்து பெரும்பான்மை உறுதியாகியுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தின் புதிய முதல்வராக விஜய் நாளை மே 07 ஆம் திகதி காலை 11.30 மணி அளவில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில் பதவியேற்கவுள்ளார். விஜய்யுடன் அமைச்சர்களாகப் பதவியேற்க வாய்ப்புள்ளவர்களின் பட்டியல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, செங்கோட்டையன், ஜே.சி.டி. பிரபாகர், ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர். நிர்மல்குமார், மரிய வில்சன், ராஜ்மோகன், அருண்ராஜ், சத்தியபாமா, விஜயலட்சுமி மற்றும் ஸ்ரீநாத் ஆகியோர் அமைச்சரவையில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக அரசியலில் திராவிடக் கட்சிகளின் நீண்டகால ஆதிக்கத்திற்குப் பிறகு, ஒரு புதிய அரசியல் சக்தியாக விஜய் அரியணை ஏறவுள்ளதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் த.வெ.க தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Posts

மு.க.ஸ்டாலினுடன் முதலமைச்சர் விஜய் சந்திப்பு!

மு.க.ஸ்டாலினுடன் முதலமைச்சர் விஜய் சந்திப்பு!

by Bharathy
May 11, 2026
0

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்தார்இந்த சந்திப்பின்போது மு.க. ஸ்டாலின், தமிழக முதலமைச்சர் விஜய்யை கௌரவித்தார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர்...

ஒரு வருடத்திற்கு தங்கம் வாங்க வேண்டாம் – மோடியின் விசித்திர வேண்டுகோள்!

ஒரு வருடத்திற்கு தங்கம் வாங்க வேண்டாம் – மோடியின் விசித்திர வேண்டுகோள்!

by Bharathy
May 11, 2026
0

நாட்டு மக்கள் ஒரு வருடத்திற்கு தங்கம் வாங்க வேண்டாம், பெட்ரோல் டீசலை குறைவாக பயன்படுத்துங்கள் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஹைதராபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய...

கட்சி விரோதமாக செயல்பட்டதாக திரிணமூல் காங்கிரஸில் 3 செய்தித் தொடர்பாளர் நீக்கம்!

கட்சி விரோதமாக செயல்பட்டதாக திரிணமூல் காங்கிரஸில் 3 செய்தித் தொடர்பாளர் நீக்கம்!

by Bharathy
May 11, 2026
0

மேற்கு வங்​கத் தேர்​தலில் திரிண​மூல் காங்​கிரஸ் பெரும் பின்​னடைவைச் சந்​தித்​தது. இதையடுத்​து, கட்​சி​யின் மூத்த செய்​தித் தொடர்​பாளர்​கள் சிலர் கட்​சி​யின் செயல்​பாடு​கள் குறித்​தும் விமர்​சனங்​களை முன்​வைத்​தனர். இது...

சிறுவனுக்கு நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாயார் கைது!

குஜராத் பெண் கொ*லையில் 30 ஆண்டுக்குப் பின் கணவர் கைது!

by Bharathy
May 11, 2026
0

குஜ​ராத் மாநிலம் அகம​தா​பாத்​தைச் சேர்ந்த ஷம்​சுதீன் முசாஜி கெடா​ வாலா​வுக்​கும் அவருடைய மனைவி பர்சானா​வுக்​கும் இடையே பிரச்​சினை ஏற்​பட்​ட​தாகக் கூறப்படுகிறது. இதனால், ஷம்​சுதீன், அவரது சகோ​தரர் இக்​பால்...

காஷ்மீர் ‘புல்டோசர்’ நடவடிக்கை அமைச்சர் கடும் கண்டனம்!

காஷ்மீர் ‘புல்டோசர்’ நடவடிக்கை அமைச்சர் கடும் கண்டனம்!

by Bharathy
May 11, 2026
0

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் போதைப் பொருள் பழக்கத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் தொடர்புடையவர்களின் சொத்துகளைக்...

வெற்றி சான்றிதழை கொண்டு செல்ல மறந்த தவெக அமைச்சர் கீர்த்தனா! முதல் நாளே எழுந்த சர்ச்சை!

வெற்றி சான்றிதழை கொண்டு செல்ல மறந்த தவெக அமைச்சர் கீர்த்தனா! முதல் நாளே எழுந்த சர்ச்சை!

by Bharathy
May 11, 2026
0

முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில் 17 ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று மே 11 ஆம் திகதி கூடியுள்ளது. புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தற்காலிக சபாநாயகர்...

தமிழகத்தின் 17ஆவது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் ஆரம்பம் : எதிர்க்கட்சி தலைவராக உதயநிதி ஸ்டாலின்!

தமிழகத்தின் 17ஆவது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் ஆரம்பம் : எதிர்க்கட்சி தலைவராக உதயநிதி ஸ்டாலின்!

by Bharathy
May 11, 2026
0

தமிழ்நாட்டின் 17ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று மே 11 ஆம் திகதி கூடிய நிலையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ-க்கள் பதவியேற்று வருகின்றனர். எம்.எல்.ஏ.க்களுக்கு பதவிப்பிரமாணத்தை தற்காலிக...

தமிழக முதலமைச்சரானார் விஜய்.!

தமிழக முதலமைச்சரானார் விஜய்.!

by Mathavi
May 10, 2026
0

புதிய சரித்திரம் படைத்து தமிழ்நாட்டின் முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பதவியேற்றார். பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க உரிமை கோரி தமிழகத்திற்கு பொறுப்பான ஆளுநருடன்,...

ஜோசப் விஜய் எனும் நான்….  நாளை முதலமைச்சராக பதவியேற்கிறார் விஜய்!

ஜோசப் விஜய் எனும் நான்…. நாளை முதலமைச்சராக பதவியேற்கிறார் விஜய்!

by Bharathy
May 9, 2026
0

த.வெ.க. தலைவர் விஜய் 4-வது முறையாக இன்று ஆளுநரை சந்தித்த நிலையில், நாளையதினம் பதவி ஏற்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ், இரண்டு...

சென்னையில் தரையிறங்க முடியாமல் நடுவானிலேயே வட்டமிடும் விமானங்கள்!

சென்னையில் தரையிறங்க முடியாமல் நடுவானிலேயே வட்டமிடும் விமானங்கள்!

by Bharathy
May 10, 2026
0

சென்னையில் திடீரென பெய்த கனமழையினால் சென்னையில் பல்வேறு பகுதிகள் ஸ்தம்பித்துள்ளதுடன், விமானச்சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே வெப்பம் அதிகமாக இருந்த நிலையில், இன்று 09...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி