நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலை தொடர்ந்து தமிழக வெற்றிக்கழகம் பெரும்பான்மையை நிரூபித்து எப்போது ஆட்சி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி உள்ளது.
பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவை பெறும் முயற்சியில் ஈடுபட்ட த.வெ.க.வினருக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் முடிவை காங்கிரஸ் கட்சி தற்போது உறுதிப்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதனை தொடர்ந்து இன்று காலை 11 மணிக்கு தமிழக காங்கிரஸ் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை, அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் ஆகியோர் செய்தியாளர்களை சந்திக்கின்றனர். இதில் த.வெ.க.வை ஆதரிப்பதாக காங்கிரஸ் தெரிவிக்கும் என கூறப்படுகிறது.
இதனால் பல ஆண்டு காலமாக தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்று வந்த காங்கிரஸ் அக்கூட்டணியில் இருந்து வெளியேறுகிறது. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Posts
மு.க.ஸ்டாலினுடன் முதலமைச்சர் விஜய் சந்திப்பு!
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்தார்இந்த சந்திப்பின்போது மு.க. ஸ்டாலின், தமிழக முதலமைச்சர் விஜய்யை கௌரவித்தார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர்...
ஒரு வருடத்திற்கு தங்கம் வாங்க வேண்டாம் – மோடியின் விசித்திர வேண்டுகோள்!
நாட்டு மக்கள் ஒரு வருடத்திற்கு தங்கம் வாங்க வேண்டாம், பெட்ரோல் டீசலை குறைவாக பயன்படுத்துங்கள் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஹைதராபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய...
கட்சி விரோதமாக செயல்பட்டதாக திரிணமூல் காங்கிரஸில் 3 செய்தித் தொடர்பாளர் நீக்கம்!
மேற்கு வங்கத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் பெரும் பின்னடைவைச் சந்தித்தது. இதையடுத்து, கட்சியின் மூத்த செய்தித் தொடர்பாளர்கள் சிலர் கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் விமர்சனங்களை முன்வைத்தனர். இது...
குஜராத் பெண் கொ*லையில் 30 ஆண்டுக்குப் பின் கணவர் கைது!
குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த ஷம்சுதீன் முசாஜி கெடா வாலாவுக்கும் அவருடைய மனைவி பர்சானாவுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், ஷம்சுதீன், அவரது சகோதரர் இக்பால்...
காஷ்மீர் ‘புல்டோசர்’ நடவடிக்கை அமைச்சர் கடும் கண்டனம்!
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் போதைப் பொருள் பழக்கத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் தொடர்புடையவர்களின் சொத்துகளைக்...
வெற்றி சான்றிதழை கொண்டு செல்ல மறந்த தவெக அமைச்சர் கீர்த்தனா! முதல் நாளே எழுந்த சர்ச்சை!
முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில் 17 ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று மே 11 ஆம் திகதி கூடியுள்ளது. புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தற்காலிக சபாநாயகர்...
தமிழகத்தின் 17ஆவது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் ஆரம்பம் : எதிர்க்கட்சி தலைவராக உதயநிதி ஸ்டாலின்!
தமிழ்நாட்டின் 17ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று மே 11 ஆம் திகதி கூடிய நிலையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ-க்கள் பதவியேற்று வருகின்றனர். எம்.எல்.ஏ.க்களுக்கு பதவிப்பிரமாணத்தை தற்காலிக...
தமிழக முதலமைச்சரானார் விஜய்.!
புதிய சரித்திரம் படைத்து தமிழ்நாட்டின் முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பதவியேற்றார். பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க உரிமை கோரி தமிழகத்திற்கு பொறுப்பான ஆளுநருடன்,...
ஜோசப் விஜய் எனும் நான்…. நாளை முதலமைச்சராக பதவியேற்கிறார் விஜய்!
த.வெ.க. தலைவர் விஜய் 4-வது முறையாக இன்று ஆளுநரை சந்தித்த நிலையில், நாளையதினம் பதவி ஏற்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ், இரண்டு...
சென்னையில் தரையிறங்க முடியாமல் நடுவானிலேயே வட்டமிடும் விமானங்கள்!
சென்னையில் திடீரென பெய்த கனமழையினால் சென்னையில் பல்வேறு பகுதிகள் ஸ்தம்பித்துள்ளதுடன், விமானச்சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே வெப்பம் அதிகமாக இருந்த நிலையில், இன்று 09...










