ஹபராதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொக்வத்த பகுதியில் மின்னல் தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு பெண் படுகாயமடைந்துள்ளார்.
இச்சம்பவத்தில் கொக்வத்த, ஹபராதுவ பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளம் பெண்ணே உயிரிழந்துள்ளார்.
மின்னல் தாக்கத்திற்குள்ளான இரு பெண்களும் அப்பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிபவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் தங்கியிருந்த விடுதி மீது மின்னல் தாக்கியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட இருவரும் உடனடியாக மீபே வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி ஒரு பெண் உயிரிழந்துள்ளார்.
காயமடைந்த மற்றைய பெண் மேலதிக சிகிச்சைகளுக்காக கராபிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் ஹபராதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Related Posts
யாழில் சூட்சுமமான முறையில் கசிப்பு வியாபாரம்; சிக்கிய சந்தேகநபர்கள்.!
யாழில் நீண்ட காலமாக சூட்சுமமான முறையில் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் மற்றும் ஆண் இன்று(03) கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, சந்தேக நபர்களிடம் இருந்து இருபது கசிப்பு...
பலத்த மின்னலுடன் மழை; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை.!
நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலையுடன் பலத்த மின்னல் ஏற்படுவதற்கான அபாயம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் அத்துல கருணாரத்ன இன்று (03)...
சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது.!
பல்லேவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பஹலகம பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் அம்பேபுஸ்ஸ பகுதியை சேர்ந்த 35 வயதுடைய நபர் என...
சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட வெளிநாட்டவர்கள் கைது.!
ராஜகிரிய, மெத வெலிக்கடை வீதியில் உள்ள இடமொன்றில் சட்டவிரோத நிதி மோசடிகள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட சுமார் 120 வெளிநாட்டவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தப்...
ஈழத் தமிழர் உரிமைகளை வலியுறுத்தி கிளிநொச்சியில் மக்கள் மாநாடு.!
"ஊர் திரள்வோம், உலகிற்குச் சொல்வோம்" எனும் முழக்கத்துடன், ஈழத் தமிழர் உரிமைகள் பெறு மன்றத்தின் (ETRA) ஏற்பாட்டில் கிளிநொச்சியில் இன்று பிரம்மாண்டமான பொதுக் கூட்டம் நடைபெற்றது. கிளிநொச்சி...
இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்கள்; இருவர் உயிரிழப்பு.!
நாட்டின் இருவேறு பகுதிகளில் நேற்று சனிக்கிழமை (02) இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குருநாகல் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருநாகல் - புத்தளம் வீதியில்...
மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பியங்கர ஜயரத்ன ஆகியோருக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அழைப்பு.!
சர்ச்சைக்குரிய 2013ஆம் ஆண்டு எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்ன ஆகியோரை எதிர்வரும் 12...
போதைப்பொருட்களுடன் மூவர் கைது.!
நாட்டின் இருவேறு பகுதிகளில் நேற்று (02) சனிக்கிழமை போதைப்பொருட்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, ஹோமாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்னிபிட்டிய பகுதியில் ஹெரோயின்,...
கணவன், மனைவி ஊழல் – ஆபத்து விளிம்பில் 5 பாடசாலைகள்.!
மனித வாழ்வுக்கு முன்னோடியாக இருக்க வேண்டிய திருச்சபைகளிலும், திருச்சபை கண்காணிப்பிலும் உள்ள பாடசாலைகளிலும் ஊழல்கள் அதிகரித்துள்ள நிலையில் தினகரனுக்கு தினமும் முறைப்பாடுகள் கிடைத்த வண்ணம் உள்ளது. யாழ்ப்பாணம்...
காத்தான்குடி எழுத்தாளர் ஹம்ஸா கலீல் மீது தாக்குதல்.!
காத்தான்குடியைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் ஹம்ஸா கலீல் அவர்கள் நேற்று (02.04.2026) சனிக்கிழமை நள்ளிரவு கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். தகவல்களுக்கு அமைவாக,இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவிருந்த தனது மைத்துனரின் வலீமா...










