மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்ப்புகள் அதிகரிக்க கூடிய நாளாக இருக்கும். புது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். குடும்ப விஷயங்களில் வாக்குவாதம் தகராறு செய்யக்கூடாது. நிதானமாக இருந்தால் இந்த நாள் இனிய நாளாக அமையும். முன் கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். அனுபவசாலிகளின் பேச்சைக் கேட்டு நடந்து கொள்ளுங்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். மனதிற்கு நிறைவான நாளாக இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஆன்மீகம் சார்ந்த விஷயத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். நல்ல சாப்பாடு, நல்ல தூக்கம் என்று இந்த நாள் நல்ல உபச்சாரத்தோடு நிறைவடையும். இந்த நாளை கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன பயம் இருக்கும். பதட்டம் இருக்கும். புது முடிவுகளை எடுக்கும் போது தடுமாற்றம் இருக்கும். வேலையில் முழு மனதோடு ஈடுபட முடியாது. வியாபாரத்தை கவனிக்க முடியாத சூழ்நிலை உருவாகும். இருப்பினும் உங்களுடைய கடமைகளை தவற விட வேண்டாம். மனதை ஒருநிலைப்படுத்தி விடாமுயற்சியுடன் செயல்பட்டால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று பொறுமையாக இருக்க வேண்டும். அவசரப்பட்டு எந்த ஒரு முடிவையும் எடுக்கக்கூடாது. முன் கோபடக் கூடாது. தேவையற்ற சிந்தனையை மனதில் வைத்துக் கொள்ளக் கூடாது. வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இறை வழிபாடு செய்யுங்கள். நீண்ட தூர பயணங்களை குறைத்துக் கொள்ளுங்கள். நல்லதே நடக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சின்னச் சின்ன தடைகள் தடங்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. புது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். நீண்ட தூர பயணங்களை குறைத்துக் கொள்ளுங்கள். முக்கியமான வேலைகளை நாளை தள்ளிப் போடுங்கள். அன்றாட வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். முன்கோபம் வேண்டாம். நிதானமாக இருந்தால் நிச்சயம் நல்லது நடக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று செலவுகள் அதிகரிக்க கூடிய நாளாக இருக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. விலை உயர்ந்த பொருட்களை இன்று வாங்காமல் இருப்பது நல்லது. வீட்டில் இருக்கும் பெண்கள் உறவுகளோடு பேசும் போது கவனமாக இருக்க வேண்டும். முன்கோபம் வேண்டாம். மாணவர்கள் படிப்பு சம்பந்தப்பட்ட விஷயத்தில் பொறுமை காப்பது நல்லது.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று தன்னம்பிக்கை தைரியம் அதிகரிக்கும். மன உறுதியோடு செயல்படுவீர்கள். எதிரிகளை போராடி ஜெயித்து வெற்றி காண்பீர்கள். நீண்ட நாள் மன பாரம் குறையும். மனதில் தேக்கி வைத்திருந்த விஷயங்களை எல்லாம் வெளியே கொட்டித் தீர்ப்பீர்கள். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த மன கசப்பு நீங்கும். உறவுகளுக்குள் ஒற்றுமை உண்டாகும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இன்று திறமைசாலியாக வலம் வருவீர்கள். வசீகரத் தோற்றம், வசீகர பேச்சு அடுத்தவர்களை உங்கள் பக்கம் ஈர்க்கும். கலைஞர்களுக்கு இன்று முக்கியத்துவம் நிறைந்த நாளாக இருக்கும். புது முயற்சிகள் வெற்றியை தரும். நீண்ட தூர பயணங்களால் மன மகிழ்ச்சி உண்டு. சுப செலவுகள் ஏற்படும். நிதி நிலைமை சீராக இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று ஆதாயம் இல்லாமல் ஒரு வேலையை கையில் எடுக்க மாட்டீர்கள். இலாப நஷ்ட நோக்கை கணக்கு போட்டு செயல்படுவீர்கள். வரவு செலவு கணக்கில் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வேலையில் புது எதிரிகள் உருவாக வாய்ப்பு உள்ளது. கவனம் தேவை.
மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று இலாபம் நிறைந்த நாளாக இருக்கும். புது முயற்சிகளை மேற்கொள்ளலாம். வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். எதிர்கால சேமிப்புக்கு உண்டான முயற்சிகளை செய்யுங்கள். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். தடைப்பட்டு வந்த சுப நிகழ்ச்சிகள் மீண்டும் நடக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று வெற்றிவாகை சூடுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் சரியாகும். சுறுசுறுப்பு இருக்கும். உயர் அதிகாரிகளோடு இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். மனநிம்மதி அடைவீர்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் அதிகரிக்க கூடிய நாளாக இருக்கும். கடன் சுமை குறையும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். உங்களுக்கான பரிசுப் பொருட்கள் கிடைக்கும் வாய்ப்புகளும் உள்ளது. கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். பயணங்களால் அசதி ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.


