இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங், நாடு திரும்புவது தொடர்பில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில.
நான்கு வருட கால சாபம் முடிவடைகின்றது எனவும், இது பாற்சோறு சமைத்துக் கொண்டாட வேண்டிய தருணம் எனவும் அவர் குறிப்பிட்டார்.கொழும்பில் நெரூர் விசேட ஊடக சந்திப்பை நடத்தியே கம்மன்பில இவ்வாறு கூறினார்.அத்துடன், ஊடக சந்திப்பில் பாற்சோறு சாப்பிட்டு மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினார்.
ஜூலி சாங், 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் இலங்கைக்கான அமெரிக்காவின் தூதுவராகச் செயற்பட்டார். சுமார் 4 வருடங்களாக இராஜதந்திர சேவையின் பின்னர் நேற்று அவர் விடைபெற்றுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியில் உதய கம்மன்பில அமைச்சராகச் செயற்பட்டார். அப்போதும் அவர் அமெரிக்கத் தூதுவரைக் கடுமையாக விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விடுதலைப்புலிகளால் அடைய முடியாத இலக்கை அரசியல் ரீதியில் பெற்றுக்கொடுக்க அமெரிக்கத் தூதுவர் முற்படுகின்றார் எனக் கடும் போக்குடைய சிங்கள தேசியவாத அமைப்புகள் குற்றஞ்சாட்டி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.










