• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, May 31, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

சுதந்திர தினம் தமிழர் தேசத்தின் கரிநாள் – வடக்கு கிழக்கில் பேரணிக்கு அழைப்பு.!

admin by admin
January 10, 2026
in இலங்கை செய்திகள்.
0
சுதந்திர தினம் தமிழர் தேசத்தின் கரிநாள் – வடக்கு கிழக்கில் பேரணிக்கு அழைப்பு.!
Share on FacebookShare on Twitter

இலங்கை சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து தமிழர் தாயகத்தில் வாழும் தமிழ்த் தேசிய மக்கள் திட்டமிட்ட அடக்குமுறைகள், ஒடுக்குமுறைகள் மற்றும் இனவழிப்பு நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக சிவில் செயற்பாட்டாளர் இருதயம் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், எதிர்வரும் 04.02.2026 சுதந்திர தினம் தமிழர் தேசத்தின் கரிநாள் எனக் குறிப்பிட்டார்.

04.02.1948 அன்று பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளர்கள் ஆட்சி அதிகாரங்களை சிங்கள பௌத்த பேரினவாத சக்திகளிடம் ஒப்படைத்ததன் பின்னரே, தமிழர் தாயகத்தில் வாழும் தமிழ்த் தேசிய மக்கள் மீது திட்டமிட்ட அடக்குமுறைகள், இனவழிப்பு நடவடிக்கைகள் மற்றும் ஒடுக்குமுறைகள் தொடர்ந்ததாக அவர் தெரிவித்தார்.

இந்த நிலைமையை கருத்தில் கொண்டு, 04.02.2026 நாளை கரிநாளாக பிரகடனப்படுத்தி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம், சிவில் செயற்பாட்டாளர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆகியவை இணைந்து வடக்கு – கிழக்கு பகுதிகளில் பாரிய பேரணியை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அவர் கூறினார்.

இந்த பேரணி, தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள், பாதுகாப்பு மற்றும் அரசியல் எதிர்காலத்தை வலியுறுத்தும் வகையில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார். அதன்படி, வடக்கு – கிழக்கு தமிழர்களின் பூர்வீக தாயகம் என்பதைக் அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், தமிழ் மக்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை உரிமைகளை உறுதி செய்யும் வகையில் தமிழ் மக்களின் தேசிய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும், தமிழ் இனவழிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கும் நிரந்தர பொறுப்புக்கூறல் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கை அரசு கையகப்படுத்தியுள்ள தமிழர்களின் பாரம்பரிய வாழ்விடங்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும், தமிழர் தாயகத்தில் புத்த விகாரைகள் நிறுவி, தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரங்களை பயன்படுத்தி நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அத்துடன், “பயங்கரவாதத் தடைச்சட்டம்” என்ற பெயரில் தொடரும் தமிழின அடக்குமுறைகள் உடனடியாக நிறுத்தப்பட்டு, நீண்டகாலமாகச் சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த 77 ஆண்டுகளாகத் தொடரும் தமிழர் இனவழிப்பு நிறுத்தப்பட்டு, சர்வதேச நீதிப் பொறிமுறை மூலம் தமிழர்களின் வாழ்வுரிமை உறுதி செய்யப்பட வேண்டும் என்றும், வடக்கு – கிழக்கு இணைந்த தமிழர்களின் பூர்வீகத் தாயகம் என்பதையும், தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமை உடையவர்கள் என்பதையும் ஏற்றுக்கொண்டு, வட்டுக்கோட்டைத் தீர்மானம் மற்றும் திம்பு பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் இறையாண்மை கொண்ட தேச அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரினார்.

இந்த அனைத்து கோரிக்கைகளையும் முன்வைத்து, 04.02.2026 அன்று வடக்கு – கிழக்கு முழுவதும் பாரிய பேரணி முன்னெடுக்கப்படும் என சிவில் செயற்பாட்டாளர் இருதயம் செல்வகுமார் தெரிவித்தார்.

Related Posts

எரிபொருள் விலைகளில் அதிரடி மாற்றம்!

எரிபொருள் விலைகளில் அதிரடி மாற்றம்!

by selvan
May 30, 2026
0

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதன்படி, ஒட்டோ டீசல் 15 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 407...

தொலைபேசிக்காக தனது சகோதரியை கொலை செய்த சிறுவன்! – ஏறாவூரில் சம்பவம்

தொலைபேசிக்காக தனது சகோதரியை கொலை செய்த சிறுவன்! – ஏறாவூரில் சம்பவம்

by selvan
May 30, 2026
0

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வீடு ஒன்றில் தனிமையில் இருந்த 11 வயது சகோதரி வைத்திருந்த கையடக்க தொலைபேசியை தர மறுத்த காரணத்தால் அவரை கழுத்தை நெரித்து கொலை...

ஹம்பாந்தோட்டையில் கடலில் நீராடச் சென்ற 3 மாணவர்கள் மாயம்!

ஹம்பாந்தோட்டையில் கடலில் நீராடச் சென்ற 3 மாணவர்கள் மாயம்!

by selvan
May 30, 2026
0

ஹம்பாந்தோட்டை, ஹுங்கம, களமெட்டிய கடற்பகுதியில் நீராடச் சென்ற 3 பாடசாலை மாணவர்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில்,bஅவர்களை தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வித்தியா வழக்கின் கொ*லையாளி ஜெயக்குமாரின் சடலம் அரச செலவில் அடக்கம் செய்யப்பட்டது

வித்தியா வழக்கின் கொ*லையாளி ஜெயக்குமாரின் சடலம் அரச செலவில் அடக்கம் செய்யப்பட்டது

by selvan
May 30, 2026
0

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்யாவின் கொலை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த கைதியான பூபாலசிங்கம் ஜெயக்குமாரின் இறுதி கிரியை இன்று நடைபெற்றுள்ளது. யாழ்ப்பாணம் கோம்பையன் இந்துமயானத்தில்,...

மஸ்கெலியாவில் வெசாக் தின நிகழ்வுகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டன

மஸ்கெலியாவில் வெசாக் தின நிகழ்வுகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டன

by selvan
May 30, 2026
0

மஸ்கெலியாவில் இன்றைய தினம் சிறப்பு வெசாக் ஊர்வலம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 2570 வது வைசாத்தி மங்கள்ய வருடத்தை முன்னிட்டு சுமனாராம விகாரையின் பௌத்த மத குரு தப்போவன...

தமது பூர்வீகக் காணிகளைத் தங்களிடம் மீளக் கையளிக்குமாறு கோரி தையிட்டியில் போராட்டம்!

தமது பூர்வீகக் காணிகளைத் தங்களிடம் மீளக் கையளிக்குமாறு கோரி தையிட்டியில் போராட்டம்!

by selvan
May 30, 2026
0

யாழ். தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை அமைந்துள்ள தங்களது பூர்வீகக் காணிகளைத் தங்களிடம் மீளக் கையளிக்குமாறு கோரி, நேற்றும் இன்றும் காணி உரிமையாளர்கள் தொடர்...

சிறுநீரக மாற்றுச் சிகிச்சைக்காக இருவருக்கு சுமந்திரன் நிதியுதவி

சிறுநீரக மாற்றுச் சிகிச்சைக்காக இருவருக்கு சுமந்திரன் நிதியுதவி

by selvan
May 30, 2026
0

இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக நிதியுதவி கோரியிருந்த முன்னாள் போராளி எதிர்மன்னசிங்கம் கிரேசியனை, இலங்கைத் தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் நேரில்...

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற நான்கு விபத்துக்களில் நால்வர் உயிரிழப்பு!

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற நான்கு விபத்துக்களில் நால்வர் உயிரிழப்பு!

by selvan
May 30, 2026
0

இலங்கையின் பல பகுதிகளில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கோர வாகன விபத்துகளில் சிக்கி நால்வர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இதற்கமைய கேகாலையின் ருவன்வெல்ல பொலிஸ்...

இராணுவத்தின் புதிய பதவி நிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமனம்!

இராணுவத்தின் புதிய பதவி நிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமனம்!

by selvan
May 30, 2026
0

இலங்கை இராணுவத்தின் 69ஆவது பதவி நிலை பிரதானியாக இலங்கை பீரங்கிப் படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். இந்த விசேட உயர் பதவி நியமனமானது...

தையிட்டி விகாரையை படம் எடுத்த இளைஞர்கள் இருவர் கைது.!

தையிட்டி விகாரையை படம் எடுத்த இளைஞர்கள் இருவர் கைது.!

by Mathavi
May 30, 2026
0

யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரைப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடி, புகைப்படங்களை எடுத்த வடமராட்சி பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்களை பலாலி பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்....

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி