வடமராட்சி கிழக்கு பகுதியில் ஏற்படும் போக்குவரத்து பிரச்சினைகளுக்கு வெகு விரைவில் ஒரு தீர்வினை கொண்டு வருவோம் என நாடாளுமன்ற உறுப்பினரும் வடமராட்சி கிழக்கு அபிவிருத்தி குழு தலைவருமான றஜீவன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில்,
யாழ்ப்பாணத்தில் மிகவும் கஷ்டமான மற்றும் பல பிரச்சினைகளையும் அபிவிருத்தியில் பின்தங்கிய பிரதேசமாக வடமராட்சி கிழக்கு காணப்படுகின்றது. இப் பிரதேசத்தில் பல அபிவிருத்திகளை செய்ய வேண்டிய கடமையில் நாம் உள்ளோம்.
முக்கியமாக அண்மைக் காலமாக வடமராட்சி கிழக்கில் அரச மற்றும் தனியார் பேருந்துகள் தமது பணியினை ஒழுங்காக செய்வது இல்லை மற்றும் பரீட்சை காலங்களில் பேருந்துகள் இடையில் பழுதடைந்து நிற்பது இவ்வாறான செயற்பாடுகள் அதிகரித்து செல்கிறது.
இதற்கான தீர்வினை வெகு விரைவில் நாம் எடுப்போம். அதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது. மற்றும் இப் பிரதேசத்தில் அதிகளவான தொழில் முனைவோர்களை கொண்டு வந்து இப் பிரதேசத்தின் அபிவிருத்தியை ஊக்குவிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் றஜீவன் அவர்கள் தெரிவித்துள்ளார்.










