“அரசாங்கம் ‘க்ளீன் ஸ்ரீலங்கா’ என்று நாடெங்கும் விளம்பரம் செய்கிறது. ஆனால், தலைநகர் கொழும்பில் மக்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்குப் பயங்கரமான துர்நாற்றம் வீசுகிறது” என நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சுற்றுச்சூழல் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“அரசாங்கம் முன்னெடுக்கும் தூய்மைப்படுத்தல் திட்டங்கள் அனைத்தும் வெறும் அரசியல் நாடகங்களாகும். அமைச்சர்களும் ஆளுங்கட்சி எம்பிக்களும் புல் வெட்டும் இயந்திரங்களை கையில் ஏந்திக்கொண்டும், வீதிகளில் வர்ணம் பூசிக்கொண்டும் ஊடகங்களுக்கு நாடகம் ஆடுகின்றனர்.
“சாதாரண ஏழை மக்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக பாதுகாப்பு வலயங்களில் கட்டியுள்ள தற்காலிக வீடுகளை இடிப்பதற்குச் சட்டம் பாய்கிறது.
ஆனால், அதே பாதுகாப்பு வலயங்களுக்குள் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ள அமைச்சர்களின் சொகுசு விடுதிகளையும் பெரிய ஹோட்டல்களையும் தொடுவதற்கு அரசாங்கத்திற்குப் பயமா? அந்த பெரிய புள்ளிகளை உங்களால் ஏன் இன்னும் அகற்ற முடியவில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.










