• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, June 23, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

யாழில் இளைஞன் ஒருவன் வெட்டிப் படுகொ*லை!

admin by admin
November 30, 2025
in இலங்கை செய்திகள்., யாழ் செய்திகள்
0
யாழில் இளைஞன் ஒருவன் வெட்டிப் படுகொ*லை!
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணத்தில் கொட்டும் மழைக்குள் இளைஞன் ஒருவன் வன்முறைக் கும்பலால் மிகக்கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி சந்திக்கு அண்மித்த பகுதியில் இன்று (30) காலைவேளை இந்த வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,’கொக்குவில் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில், கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

அதன் பிரகாரம் இன்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸ் நிலையத்தில் கையெழுத்திட்ட பின்னர், தனது நண்பனுடன் உந்துருளியில் ஆடியபாதம் வீதி ஊடாக தனது வீடு நோக்கிப் பயணித்தவேளை பொலிஸ் நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்தில், திருநெல்வேலி சந்தியை அண்மித்த பகுதியில் இரண்டு உந்துருளியில் வந்த 4 பேர் அடங்கிய வன்முறைக் கும்பல் அவர்களின் உந்துருளியை வழிமறித்து பின்னால் அமர்ந்து பயணித்த இளைஞர் மீது சரமாரியாக வாள் வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டனர்.

தாக்குதலாளிகளிடம் இருந்து உயிரை காக்க வாள் வெட்டுக் காயங்களுடன் வீதியில் சுமார் 50 மீற்றர் தூரம் ஓடிச் சென்றவரை தாக்குதலாளிகள் துரத்தித் துரத்தி வெட்டியுள்ளனர்.

ஓடிச் சென்றவர் வர்த்தக நிலையம் ஒன்றின் முன்பாக வீழ்ந்த போது, துரத்தி வந்த நால்வரும் சரமாரியாக வாள் வெட்டை மேற்கொண்டதில் இளைஞரின் கால் ஒன்று கணுக்காலுடன் துண்டாடப்பட்டுள்ளது. அதையடுத்து தாக்குதலாளிகள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இரத்த வெள்ளத்தில் காணப்பட்ட இளைஞரை அங்கிருந்தவர்கள் மீட்டு, யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். எனினும், வைத்தியசாலையில் இளைஞர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முன்பகை காரணமாகவே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது என்று ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வர்த்தக நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் கமராக்களில் சம்பவங்கள் பதிவாகியுள்ளதால் தாக்குதலாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும், அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Posts

சிஐடிக்கு எதிராக சுரேஷ் சலேயின் மனைவி முறைப்பாடு!

சிஐடிக்கு எதிராக சுரேஷ் சலேயின் மனைவி முறைப்பாடு!

by selvan
June 23, 2026
0

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சலேயின் மனைவி மனோரி சலே, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளுக்கு எதிராக குற்றங்களால் பாதிக்கப்பட்டோர்...

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை நாடு இழக்க நேரிடும் – ஜி.எல். பீரிஸ் எச்சரிக்கை!

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை நாடு இழக்க நேரிடும் – ஜி.எல். பீரிஸ் எச்சரிக்கை!

by selvan
June 23, 2026
0

இலங்கையில் தற்போது அரங்கேறி வரும் தன்னிச்சையான கைது நடவடிக்கைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் காரணமாக ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை நாடு இழக்கும் பாரிய பொருளாதார அபாயம்...

சுரேஷ் சலேவை கைது செய்தமை ஒரு கேலிக்கூத்தான விடயம் – சரத் வீரசேகர சாடல்!

by selvan
June 23, 2026
0

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான தற்போதைய விசாரணைகள் முற்றிலும் அரசியல் மயமாக்கப்பட்டு, வெறும் அரசியல் பழிவாங்கலாகவே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர...

நாட்டில் புதிதாக 10 இலட்சம் ஏழை மக்கள் உருவாக்கியுள்ளனர்!

by selvan
June 23, 2026
0

வளமான நாடு, அழகான வாழ்க்கை" என்ற வாக்குறுதியுடன் ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசு, கடந்த ஒன்றரை முதல் இரண்டு ஆண்டு காலப்பகுதிக்குள் நாட்டில் புதிதாக 10 இலட்சம்...

யாழ். மாவட்ட செயலகத்தின் முன்பாக போராட்டம் நடத்த தீர்மானம்!

by selvan
June 23, 2026
0

வடக்கு மாகாணத்தில் நிலவும் வேலைவாய்ப்பு வெற்றிடங்களுக்குப் பட்டதாரிகளை உள்ளீர்க்கக் கோரியும், ஆசிரியர் நியமனப் போட்டிப் பரீட்சை அநீதிகளுக்கு எதிராகவும் நாளைமறுதினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் முன்பாகப்...

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது மரபணுக்களைச் சேகரிக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை!

by selvan
June 23, 2026
0

இதுவரை காலமும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகமோ அல்லது ஏனைய அரச நிறுவனங்களோ காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவினர்களின் மரபணு மாதிரிகளைச் சேகரித்து, அதனைப் பாதுகாக்கும் செயற்பாடுகள் எதனையும் முன்னெடுக்கவில்லை...

செம்மணி புதைகுழி விவகாரம்; சோமரத்ன ராஜபக்சவை பன்னாட்டு விசாரணைக்குட்படுத்தி உண்மைகளை வெளிப்படுத்துக.!

செம்மணி புதைகுழி விவகாரம்; சோமரத்ன ராஜபக்சவை பன்னாட்டு விசாரணைக்குட்படுத்தி உண்மைகளை வெளிப்படுத்துக.!

by Mathavi
June 23, 2026
0

யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பாக இராணுவ லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்சவை பன்னாட்டு விசாரணைக்கு உட்படுத்தி, உண்மைகளை வெளிப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வன்னி...

சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வடை தயாரிப்பு நிலையம் மூடல்.!

சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வடை தயாரிப்பு நிலையம் மூடல்.!

by Mathavi
June 23, 2026
0

மன்னார், பள்ளிமுனை பிரதான வீதியில் இயங்கி வந்த வடை தயாரிப்பு நிலையம் ஒன்று, சுகாதார அதிகாரிகளால் இன்று (23) மேற்கொள்ளப்பட்ட திடீர் ஆய்வின்போது சுகாதார சீர்கேடுகள் உடன்...

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய ஜே.வி.பியின் தேசிய பட்டியல் உறுப்பினரை பாதுகாக்கவே அரசு முயற்சி.!

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய ஜே.வி.பியின் தேசிய பட்டியல் உறுப்பினரை பாதுகாக்கவே அரசு முயற்சி.!

by Mathavi
June 23, 2026
0

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்படும் இப்ராஹிம் என்பவரைப் பாதுகாப்பதற்கே தற்போதைய அரசு தீவிரமாக முயற்சித்து வருகின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய...

தேர்தல்களின் போது அழியாத மை பயன்படுத்துவதை நீக்க அமைச்சரவை அனுமதி.!

தேர்தல்களின் போது அழியாத மை பயன்படுத்துவதை நீக்க அமைச்சரவை அனுமதி.!

by Mathavi
June 23, 2026
0

இலங்கையில் நடைபெறும் தேர்தல்களின் போது வாக்காளர்களின் விரல்களில் அழியாத மை பயன்படுத்துவதற்கான சட்டப்பூர்வ தேவையை நீக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவைத் தொடர்ந்து இந்த...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி