• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, June 23, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை நாடு இழக்க நேரிடும் – ஜி.எல். பீரிஸ் எச்சரிக்கை!

selvan by selvan
June 23, 2026
in இலங்கை செய்திகள்.
0
ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை நாடு இழக்க நேரிடும் – ஜி.எல். பீரிஸ் எச்சரிக்கை!
Share on FacebookShare on Twitter

இலங்கையில் தற்போது அரங்கேறி வரும் தன்னிச்சையான கைது நடவடிக்கைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் காரணமாக ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை நாடு இழக்கும் பாரிய பொருளாதார அபாயம் ஏற்பட்டுள்ளது என்று கூட்டு எதிர்க்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் எச்சரித்துள்ளார்.

கொழும்பு 3, மலர் வீதியிலுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற மக்களுக்கான கூட்டு எதிர்க்கட்சியின் விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சரும் ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க, முன்னாள் இராஜாங்க அமைச்சர்களான அஜித் மன்னப்பெரும மற்றும் லசந்த அழகியவண்ண உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் கலந்துகொண்ட இந்த ஊடக சந்திப்பில் பேராசிரியர் பீரிஸ் மேலும் தெரிவிக்கையில்,

“நாம் அண்மையில் சர்வதேச நாணய நிதியத்தின் கொழும்பு அலுவலக அதிகாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடினோம். நாட்டின் மக்கள் எதிர்நோக்கும் கடுமையான பொருளாதாரச் சுமையைக் கருத்திற்கொண்டு, எரிபொருளுக்கான மானியங்களைக் குறைக்கவோ அல்லது முழுமையாக நிறுத்தவோ அரசுக்கு ஆலோசனை வழங்க வேண்டாம் என அங்கு உத்தியோகபூர்வமாகக் கோரிக்கை விடுத்தோம்.

இந்தச் சந்திப்பு முடிந்து நாம் வெளியேறிய போது ஓர் அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்தது. அரசியல் கட்சித் தலைவரான சுகீஸ்வர பண்டார, ஏதோ பாதாள உலகக் குழுவினரை ஒடுக்கும் பாணியில், வீதியை மறித்து வாகனத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியே இழுக்கப்பட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் வாகனத்தில் இருந்த கூட்டு எதிர்க்கட்சியின் ஊடக ஒருங்கிணைப்பாளர் பினோய் ஹெட்டியாராச்சியும் எவ்வித குற்றச்சாட்டுகளுமின்றி ஐந்து மணிநேரம் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் இதுவொரு கடுமையான குற்றவியல் குற்றம் என்பதால், இந்த அநீதியான கைதுக்கு எதிராக மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் நாம் செய்து வருகின்றோம். தற்போதைய ஆட்சி ஒரு பொலிஸ் இராஜ்யத்தை நோக்கிய சர்வாதிகாரப் பயணமாகவே அமைந்துள்ளது.

அடுத்த வருட மார்ச் மாதத்துடன் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டம் நிறைவடையவுள்ள நிலையில், நாடு தற்போது கடுமையான அந்நியச் செலாவணி நெருக்கடியைச் சந்தித்து வருகின்றது. கடந்த மே மாதத்தில் மட்டும் சுற்றுலாத்துறை வருமானம் ஐந்து சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதுடன், வெளிநாட்டுப் பணியாளர்களின் டொலர் வருமானமும் பெருமளவில் குறைந்துள்ளது.

இந்தச் சூழ்நிலையில், மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு எவ்வித சுங்கவரியுமின்றி ஆடை, தேயிலை, மசாலாப் பொருள்கள் உள்ளிட்ட ஏற்றுமதிகளை மேற்கொள்வதற்கு வழங்கப்படும் ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையே இலங்கையின் பொருளாதாரத்துக்குத் தற்போதைய ஒரே தீர்வாக உள்ளது.

அடுத்த வருடம் ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகைக்காக ஐரோப்பிய ஒன்றியத்திற்குப் புதிய விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. இதற்காகச் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உள்ளிட்ட 27 சர்வதேச உடன்படிக்கைகளுக்கு இலங்கை அரசு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்பது முதன்மை நிபந்தனையாகும். தற்போதுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் சர்வதேச மனித உரிமை விதிகளுக்கு முரணானது என ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்கள் தொடர்ச்சியாகக் கூறி வருகின்றனர்.

ஆறு மாதங்களுக்கு முன்பு தற்போதைய நீதி அமைச்சர் கொண்டுவந்த புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம், பழைய சட்டத்தை விடவும் மோசமானது எனச் சிவில் அமைப்புகளாலும் சட்டத்தரணிகளாலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டதால், அதனை நிறைவேற்ற முடியாது என்பதை அரசே ஏற்றுக்கொண்டுள்ளது. தற்போது மீண்டும் ஒரு புதிய சட்டமூலத்தை அடுத்த இரு மாதங்களுக்குள் சமர்ப்பிக்கப் போவதாக நீதி அமைச்சர் கிளிநொச்சியில் வைத்து தெரிவித்துள்ள போதிலும், அதன் உள்ளடக்கம் என்னவென்று யாருக்கும் தெரியாது. சமூகத்துடன் முறையான கலந்துரையாடல் இன்றி தன்னிச்சையாக உருவாக்கப்படும் இத்தகைய சட்டங்களால் ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை இல்லாது போகும் அபாயம் உள்ளது. அவ்வாறு நடந்தால் இலங்கை பொருளாதாரத்தால் அந்தப் பாரிய பாதிப்பைத் தாங்க முடியாது.

இலங்கை அரசமைப்பின் படியும் சர்வதேச சட்டங்களின் படியும் சித்திரவதைகளுக்கு உள்ளாகாமல் வாழ்வது அனைவரதும் அடிப்படை உரிமையாகும். பொலிஸ் மற்றும் சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கும் இந்தப் பாதுகாப்பு பொருந்தும்.

இலங்கையில் சித்திரவதைகளின் நிலைமை குறித்து ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் துணைக் குழுவொன்று தற்போது இலங்கைக்கு வருகை தந்துள்ளது. இத்தகைய தருணத்தில் சர்வதேச விதிகளை இலங்கை மீறினால் அதன் விளைவுகள் மிக ஆபத்தானதாக அமையும்.” – என்றார்.

Related Posts

பருத்தித்துறை மருதங்கேணி வீதியில் இன்றும் சம்பு புற்  தரவைக்கு விஷமிகள் தீ வைத்தனர்!

பருத்தித்துறை மருதங்கேணி வீதியில் இன்றும் சம்பு புற்  தரவைக்கு விஷமிகள் தீ வைத்தனர்!

by selvan
June 23, 2026
0

யாழ் - பருத்தித்துறை மருதங்கேணி வீதியில் வலிக்கண்டி பகுதியில் இன்றைய தினமும் விஷமிகளால் சம்பு புற்  தரவைக்கு தீ வைக்கப்பட்டது. இதனால் உருவான கரும்புகையால் சில நிமிடங்கள்...

சிஐடிக்கு எதிராக சுரேஷ் சலேயின் மனைவி முறைப்பாடு!

சிஐடிக்கு எதிராக சுரேஷ் சலேயின் மனைவி முறைப்பாடு!

by selvan
June 23, 2026
0

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சலேயின் மனைவி மனோரி சலே, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளுக்கு எதிராக குற்றங்களால் பாதிக்கப்பட்டோர்...

சுரேஷ் சலேவை கைது செய்தமை ஒரு கேலிக்கூத்தான விடயம் – சரத் வீரசேகர சாடல்!

by selvan
June 23, 2026
0

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான தற்போதைய விசாரணைகள் முற்றிலும் அரசியல் மயமாக்கப்பட்டு, வெறும் அரசியல் பழிவாங்கலாகவே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர...

நாட்டில் புதிதாக 10 இலட்சம் ஏழை மக்கள் உருவாக்கியுள்ளனர்!

by selvan
June 23, 2026
0

வளமான நாடு, அழகான வாழ்க்கை" என்ற வாக்குறுதியுடன் ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசு, கடந்த ஒன்றரை முதல் இரண்டு ஆண்டு காலப்பகுதிக்குள் நாட்டில் புதிதாக 10 இலட்சம்...

யாழ். மாவட்ட செயலகத்தின் முன்பாக போராட்டம் நடத்த தீர்மானம்!

by selvan
June 23, 2026
0

வடக்கு மாகாணத்தில் நிலவும் வேலைவாய்ப்பு வெற்றிடங்களுக்குப் பட்டதாரிகளை உள்ளீர்க்கக் கோரியும், ஆசிரியர் நியமனப் போட்டிப் பரீட்சை அநீதிகளுக்கு எதிராகவும் நாளைமறுதினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் முன்பாகப்...

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது மரபணுக்களைச் சேகரிக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை!

by selvan
June 23, 2026
0

இதுவரை காலமும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகமோ அல்லது ஏனைய அரச நிறுவனங்களோ காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவினர்களின் மரபணு மாதிரிகளைச் சேகரித்து, அதனைப் பாதுகாக்கும் செயற்பாடுகள் எதனையும் முன்னெடுக்கவில்லை...

செம்மணி புதைகுழி விவகாரம்; சோமரத்ன ராஜபக்சவை பன்னாட்டு விசாரணைக்குட்படுத்தி உண்மைகளை வெளிப்படுத்துக.!

செம்மணி புதைகுழி விவகாரம்; சோமரத்ன ராஜபக்சவை பன்னாட்டு விசாரணைக்குட்படுத்தி உண்மைகளை வெளிப்படுத்துக.!

by Mathavi
June 23, 2026
0

யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பாக இராணுவ லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்சவை பன்னாட்டு விசாரணைக்கு உட்படுத்தி, உண்மைகளை வெளிப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வன்னி...

சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வடை தயாரிப்பு நிலையம் மூடல்.!

சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வடை தயாரிப்பு நிலையம் மூடல்.!

by Mathavi
June 23, 2026
0

மன்னார், பள்ளிமுனை பிரதான வீதியில் இயங்கி வந்த வடை தயாரிப்பு நிலையம் ஒன்று, சுகாதார அதிகாரிகளால் இன்று (23) மேற்கொள்ளப்பட்ட திடீர் ஆய்வின்போது சுகாதார சீர்கேடுகள் உடன்...

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய ஜே.வி.பியின் தேசிய பட்டியல் உறுப்பினரை பாதுகாக்கவே அரசு முயற்சி.!

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய ஜே.வி.பியின் தேசிய பட்டியல் உறுப்பினரை பாதுகாக்கவே அரசு முயற்சி.!

by Mathavi
June 23, 2026
0

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்படும் இப்ராஹிம் என்பவரைப் பாதுகாப்பதற்கே தற்போதைய அரசு தீவிரமாக முயற்சித்து வருகின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய...

தேர்தல்களின் போது அழியாத மை பயன்படுத்துவதை நீக்க அமைச்சரவை அனுமதி.!

தேர்தல்களின் போது அழியாத மை பயன்படுத்துவதை நீக்க அமைச்சரவை அனுமதி.!

by Mathavi
June 23, 2026
0

இலங்கையில் நடைபெறும் தேர்தல்களின் போது வாக்காளர்களின் விரல்களில் அழியாத மை பயன்படுத்துவதற்கான சட்டப்பூர்வ தேவையை நீக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவைத் தொடர்ந்து இந்த...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி