• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, May 31, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

தேசிய விவசாய ஆராய்ச்சி சிறப்பு விருது வழங்கும் விழா!

admin by admin
October 23, 2025
in இலங்கை செய்திகள்.
0
தேசிய விவசாய ஆராய்ச்சி சிறப்பு விருது வழங்கும் விழா!
Share on FacebookShare on Twitter

2023 மற்றும் 2025 ஆம் ஆண்டு தேசிய விவசாய ஆராய்ச்சி சிறப்பு விருது வழங்கும் விழா ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (23) பிற்பகல் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

ஆராய்ச்சித் துறையில் சிறந்து விளங்க, விவசாய ஆராய்ச்சியாளர்களை ஊக்குவித்தல், அவர்களின் தொழில் எதிர்பார்ப்புகளை மேம்படுத்த உதவுதல் மற்றும் தேசிய விவசாயத்துறையின் வளர்ச்சிக்கு அளிக்கப்பட்ட பங்களிப்பை பாராட்டும் நோக்கங்களுக்காக இலங்கை விவசாய ஆராய்ச்சிக் கொள்கை சபை (SLCARP) இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த விருது வழங்கும் விழாவை ஏற்பாடு செய்கின்றது.

இந்த ஆண்டு விருது வழங்கும் விழாவில், 2023 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கான வனவியல் மற்றும் ஏற்றுமதி விவசாயப் பயிர்கள் உள்ளிட்ட பெருந்தோட்ட பயிர்ச்செய்கை, மலர் வளர்ப்பு உள்ளிட்ட பெருந்தோட்டம் அல்லாத பயிர்ச்செய்கை, கால்நடைகள் மற்றும் மீன்வளர்ப்பு மற்றும் நீர்வாழ் வளங்கள் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் விவசாய ஆராய்ச்சி சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.

இந்த விருது வழங்கும் விழாவில் உரையாற்றிய கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டீ. லால்காந்த, அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு இறக்குமதியை நம்பியிருக்க வேண்டியிருப்பதும், அதற்காக நுகர்வோர் பெரும் செலவுகளைச் சுமக்க வேண்டியிருப்பதும் விவசாயத் துறையில் எழுந்துள்ள பாரிய பிரச்சினையாகும் என்று தெரிவித்தார்.

எனவே, விவசாயத்துறையை நவீனமயமாக்குவதற்கான உத்திகளைக் கண்டறிதல், இளம் விவசாய தொழில்முனைவோரை உருவாக்குதல், விவசாய பொருட்களுக்கு பெறுமதி சேர்த்தல், ஏற்றுமதிசார்ந்த விவசாய உற்பத்திகளின் வளர்ச்சியை மேம்படுத்தல் ஆகியவற்றிற்கு விஞ்ஞான ஆராய்ச்சி மூலம் பங்களிப்பது விவசாய ஆராய்ச்சியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பாரிய பொறுப்பு என்று சுட்டிக்காட்டிய அமைச்சர், இந்த ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகளை கொள்கை வகுப்பாளர்களுக்கும் தொடர்புடைய அனைத்து தரப்பினர்களுக்கும் போதுமான அளவு தெரிவிப்பதன் மூலம், அந்தக் கண்டுபிடிப்புகளை களத்தில் யதார்த்தமாக மாற்ற செயற்படுமாறு ஆராய்ச்சியாளர்களை கேட்டுக்கொண்டார்.

மேலும், விவசாய ஆராய்ச்சிக் கொள்கை சபை இந்நாட்டில் விவசாய ஆராய்ச்சிக்கு வழங்கும் பங்களிப்புக்காக தனது நன்றியைத் தெரிவித்த அமைச்சர், விவசாயத் துறையில் உள்ள அனைத்துத் தரப்பினர்களுக்கும் சிறந்த, அதாவது, இந்த நாட்டு மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும், இறக்குமதியைக் குறைத்து விவசாய சமூகங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும், சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாய வளர்ச்சியை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் மேலும் குறிப்பிட்டார்.

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன, கமத்தொழில் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் அரவிந்த செனரத் விதாரண ஆகியோருடன் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் டி.பி. விக்ரமசிங்க உள்ளிட்ட சிரேஷ்ட அரச அதிகாரிகள், இலங்கை விவசாய ஆராய்ச்சிக் கொள்கை சபையின் தலைவர் பேராசிரியர் ஆர்.எஸ். தர்மகீர்த்தி பல்கலைக்கழக உபவேந்தர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் தனியார் துறை தரப்பினர்கள் உட்பட பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

Related Posts

எரிபொருள் விலைகளில் அதிரடி மாற்றம்!

எரிபொருள் விலைகளில் அதிரடி மாற்றம்!

by selvan
May 30, 2026
0

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதன்படி, ஒட்டோ டீசல் 15 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 407...

தொலைபேசிக்காக தனது சகோதரியை கொலை செய்த சிறுவன்! – ஏறாவூரில் சம்பவம்

தொலைபேசிக்காக தனது சகோதரியை கொலை செய்த சிறுவன்! – ஏறாவூரில் சம்பவம்

by selvan
May 30, 2026
0

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வீடு ஒன்றில் தனிமையில் இருந்த 11 வயது சகோதரி வைத்திருந்த கையடக்க தொலைபேசியை தர மறுத்த காரணத்தால் அவரை கழுத்தை நெரித்து கொலை...

ஹம்பாந்தோட்டையில் கடலில் நீராடச் சென்ற 3 மாணவர்கள் மாயம்!

ஹம்பாந்தோட்டையில் கடலில் நீராடச் சென்ற 3 மாணவர்கள் மாயம்!

by selvan
May 30, 2026
0

ஹம்பாந்தோட்டை, ஹுங்கம, களமெட்டிய கடற்பகுதியில் நீராடச் சென்ற 3 பாடசாலை மாணவர்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில்,bஅவர்களை தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வித்தியா வழக்கின் கொ*லையாளி ஜெயக்குமாரின் சடலம் அரச செலவில் அடக்கம் செய்யப்பட்டது

வித்தியா வழக்கின் கொ*லையாளி ஜெயக்குமாரின் சடலம் அரச செலவில் அடக்கம் செய்யப்பட்டது

by selvan
May 30, 2026
0

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்யாவின் கொலை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த கைதியான பூபாலசிங்கம் ஜெயக்குமாரின் இறுதி கிரியை இன்று நடைபெற்றுள்ளது. யாழ்ப்பாணம் கோம்பையன் இந்துமயானத்தில்,...

மஸ்கெலியாவில் வெசாக் தின நிகழ்வுகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டன

மஸ்கெலியாவில் வெசாக் தின நிகழ்வுகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டன

by selvan
May 30, 2026
0

மஸ்கெலியாவில் இன்றைய தினம் சிறப்பு வெசாக் ஊர்வலம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 2570 வது வைசாத்தி மங்கள்ய வருடத்தை முன்னிட்டு சுமனாராம விகாரையின் பௌத்த மத குரு தப்போவன...

தமது பூர்வீகக் காணிகளைத் தங்களிடம் மீளக் கையளிக்குமாறு கோரி தையிட்டியில் போராட்டம்!

தமது பூர்வீகக் காணிகளைத் தங்களிடம் மீளக் கையளிக்குமாறு கோரி தையிட்டியில் போராட்டம்!

by selvan
May 30, 2026
0

யாழ். தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை அமைந்துள்ள தங்களது பூர்வீகக் காணிகளைத் தங்களிடம் மீளக் கையளிக்குமாறு கோரி, நேற்றும் இன்றும் காணி உரிமையாளர்கள் தொடர்...

சிறுநீரக மாற்றுச் சிகிச்சைக்காக இருவருக்கு சுமந்திரன் நிதியுதவி

சிறுநீரக மாற்றுச் சிகிச்சைக்காக இருவருக்கு சுமந்திரன் நிதியுதவி

by selvan
May 30, 2026
0

இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக நிதியுதவி கோரியிருந்த முன்னாள் போராளி எதிர்மன்னசிங்கம் கிரேசியனை, இலங்கைத் தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் நேரில்...

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற நான்கு விபத்துக்களில் நால்வர் உயிரிழப்பு!

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற நான்கு விபத்துக்களில் நால்வர் உயிரிழப்பு!

by selvan
May 30, 2026
0

இலங்கையின் பல பகுதிகளில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கோர வாகன விபத்துகளில் சிக்கி நால்வர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இதற்கமைய கேகாலையின் ருவன்வெல்ல பொலிஸ்...

இராணுவத்தின் புதிய பதவி நிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமனம்!

இராணுவத்தின் புதிய பதவி நிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமனம்!

by selvan
May 30, 2026
0

இலங்கை இராணுவத்தின் 69ஆவது பதவி நிலை பிரதானியாக இலங்கை பீரங்கிப் படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். இந்த விசேட உயர் பதவி நியமனமானது...

தையிட்டி விகாரையை படம் எடுத்த இளைஞர்கள் இருவர் கைது.!

தையிட்டி விகாரையை படம் எடுத்த இளைஞர்கள் இருவர் கைது.!

by Mathavi
May 30, 2026
0

யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரைப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடி, புகைப்படங்களை எடுத்த வடமராட்சி பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்களை பலாலி பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்....

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி