• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, May 20, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home கட்டுரைகள்

பிரித்தானியாவில் மாபெரும் போராட்டம் – பின்புலம் என்ன?

Mathavi by Mathavi
September 19, 2025
in கட்டுரைகள்
0
பிரித்தானியாவில் மாபெரும் போராட்டம் – பின்புலம் என்ன?
Share on FacebookShare on Twitter

பிரித்தானியாவில் புலம்பெயர்வுக்கு எதிராக ஒன்றரை இலட்சம் பேர் சேர்ந்து மாபெரும் பேரணியை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சனிக்கிழமை இந்த மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தீவிர வலதுசாரி ஆதரவாளரான டாமி ரொபின்சன் தலைமையில் இந்தப் பேரணி ‛Unite The Kingdom’ என்ற பெயரில் முன்னெடுக்கப்பட்டது.

சுமார் ஒன்றரை இலட்சத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். இந்தப் பேரணியில் ஈடுபட்ட சிலர், காவல்துறையினர் மீதும் தாக்குதலை நடத்தினர். கூட்டத்துக்குள் இருந்து காவல்துறையினர் மீது போத்தல்களை வீசியதில், 26 பேர் காயமடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து, அமைதியைச் சீர்குலைத்தல், வன்முறை, தாக்குதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் 25 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் போராட்டக்காரர்களுக்கு பிரித்தானியப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
மக்களுக்கு அமைதியான முறையில் போராட்டம் நடத்த உரிமை உள்ளது. இங்கிலாந்து சகிப்புத் தன்மை, பன்முகத்தன்மை, மற்றும் மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஒரு நாடு. நமது கொடி நமது பன்முகத்தன்மையை குறிக்கிறது. ஆனால் இன ரீதியான மிரட்டலை பொறுத்துக் கொள்ள மாட்டோம். மற்றவர்களை மிரட்டுவதன் மூலமாகவோ அல்லது பணியில் இருக்கும் அதிகாரிகளை தாக்குவதன் மூலமாகவோ அவர்கள் சட்டத்தை கையில் எடுக்க கூடாது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

புலம்பெயர்ந்தோருக்கு எதிரான இந்தப் பேரணியைக் குறிப்பிட்டுப் பேசிய டெஸ்லா நிறுவனர் எலோன் மஸ்க், பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான பிரிட்டன் அரசைக் கலைக்க வேண்டும் என்று கூறினார்.

போராட்டக்காரர்களுடன் காணொளி அழைப்பில் பேசிய எலோன் மஸ்க், “நீங்கள் வன்முறையைத் தேர்ந்தெடுத்தாலும் இல்லாவிட்டாலும், வன்முறை உங்களைத் தேடி வருகிறது. நீங்கள் எதிர்த்துப் போராட வேண்டும் அல்லது நீங்கள் இறந்துவிட வேண்டும். அதுதான் உண்மை என்று நினைக்கிறேன் என்று தெரிவித்தார். மேலும், கட்டுப்பாடற்ற புலம்பெயர்வு பிரிட்டனை அழித்து விடும் என்றும் அவர் எச்சரித்தார்.

ஏற்கனவே குடியேற்ற விதிமுறைகளை பிரித்தானியா கடுமையாக்கியுள்ளது. நிகர இடம்பெயர்வை குறைப்பதற்காக குடியேற்ற விதிமுறைகளை கடுமையாக்க பிரித்தானியா திட்டமிட்டுள்ளமை தொடர்பான செய்திகளை அண்மைக்கால செய்திகள் வாயிலாகவும் அறியலாம். நிகர இடம்பெயர்வு என்பது பிரித்தானியாவுக்கு வரும் நபர்களின் எண்ணிக்கைக்கும், வெளியேறும் எண்ணிக்கைக்கும் உள்ள வித்தியாசம் ஆகும்.

குடியேற்ற விதிமுறைகளின் படி, பிரித்தானியாவில் குடியுரிமை பெறுவதற்கு விண்ணப்பிக்க 10 வருடங்கள் வசித்திருப்பது கட்டாயம் என குறிப்பிட்டப்பட்டுள்ளது.

அதன்படி, ஐந்து ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு விசாவுக்கும் புதிய ஆங்கில மொழி அறிவுக்கு மேலதிகமாக இந்த விதிமுறை கொண்டு வரப்பட்டவுள்ளது.

நிகர இடம்பெயர்வை குறைப்பதற்கான சீர்திருத்தங்களை பிரித்தானியா பிரதமர் கெயிர் ஸ்டார்மர் ஏற்கனவே தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

2020 ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறியபோது, நிகர இடம்பெயர்வு அதிகரித்தது.
மக்களது இடம்பெயர்வானது, 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலான காலப்பகுதியில் 903,000 ஐ எட்டியது. அதன்பின்னர், 2024 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் 728,000 ஆகக் குறைந்தது.
ஆனால், 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலான பிரெக்ஸிட் ஒப்பந்தத்துக்கு முந்தைய அதிகபட்சமான 329,000 ஐ விட அதிகமாக உள்ளது.

சட்டப்பூர்வ இடம்பெயர்வு மற்றும் சட்டவிரோத குடியேற்றத்தை சமாளிக்க பிரித்தானியா அரசாங்கம் அழுத்தத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் எலிசபெத் மகாராணி தலைமையிலான பிரித்தானியா ஈழத்து மக்கள் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து சென்றபோது அவர்களை அரவணைத்து சம உரிமை வழங்கி இருந்தது.

இரண்டாம் எலிசபெத் மகாராணி தலைமையிலான பிரித்தானியா ஜனநாயகம் கொண்ட நாடாக இருந்தது. குறிப்பாக யுத்தம் காரணமாக ஈழத்தில் இருந்து இடம்பெயர்ந்து அங்கு சென்ற மக்களை அரவணைத்து, அந்த நாட்டு மக்களுக்கு இருக்கும் சம உரிமையை வழங்கக்கூடிய ஒரு நிலையை பிரித்தானியாவில் காணக்கூடியதாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று ஈழத்து புலம்பெயர்ந்தோர் அந்த நாட்டில் இருந்து உரிமைப் போராட்டங்களை மேற்கொள்ளும் போதெல்லாம் அவர்களை அடக்கு முறைக்கு உள்ளாக்கும் நிலை அங்கு இருக்கவில்லை. ஜனநாயக மரபுகள் அந்த நாட்டிலே மேலோங்கி இருப்பதே இதற்கு காரணமாகும்.

மேலும், கடந்த கிழமை புலம்பெயர்வுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட பிரித்தானியர்கள் இலங்கை மற்றும் இந்திய உணவகங்களில் சிற்றுண்டிகளை உண்டு ஓய்வுபெற்றுச் சென்றுள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்த ஆர்ப்பாட்டங்கள் ஆப்கான் மற்றும் பாகிஸ்தான் இஸ்லாமியர்களுக்கெதிரானது என்ற கருத்தும் நிலவிவரும் நிலையில் ஈழத்தமிழர் மற்றும் இந்திய மக்களுக்கும் இந்தத் தகவல்கள் சற்று ஆறுதல் தரும் செய்தியாகவே இருக்கின்றது.

Related Posts

மூட்டுவாத விழிப்புணர்வு தினம் இன்று!

மூட்டுவாத விழிப்புணர்வு தினம் இன்று!

by admin
October 12, 2025
0

உலக மூட்டுவாத விழிப்புணர்வு தினம் ஒக்டோபர் 12 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது. ஆர்த்திரைட்டிஸ் (Arthritis) என்பது மூட்டுகளில் ஏற்படும் நீடித்த வலி, வீக்கம், உறுதிப்பாடு போன்ற பிரச்சினைகளால்...

மாகாண சபைத் தேர்தலை நடத்தும்படி வலுக்கும் கோரிக்கை!

மாகாண சபைத் தேர்தலை நடத்தும்படி வலுக்கும் கோரிக்கை!

by admin
September 26, 2025
0

எமது அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் மூன்று தேர்தல்களை நடத்தியுள்ளது. தற்போது நாட்டில் அபிவிருத்திகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அவற்றுக்குத் தடை வராமல் அடுத்த ஆண்டு அதாவது 2026ஆம்...

வலுவிழக்கும் இலங்கை தொடர்பான சர்வதேச விசாரணை.!

வலுவிழக்கும் இலங்கை தொடர்பான சர்வதேச விசாரணை.!

by Mathavi
August 29, 2025
0

புதிய அரசாங்கம் மீதான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் நம்பிக்கையும் - தமிழர் பிரதிநிதிகளின் அதிருப்தியும் இலங்கையில் இடம்பெற்ற போர்க்கால குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையின்...

வறுமையின் விளிம்பில் இலங்கை

வறுமையின் விளிம்பில் இலங்கை

by Mathavi
August 22, 2025
0

இலங்கை, பெருகிவரும் குடும்பங்களை வறுமைக்கோட்டிற்குக் கீழே தள்ளும் ஒரு முன்னோடியில்லாத பொருளாதார சவாலை எதிர்கொள்கிறது. அஸ்வெசும திட்டம் போன்ற சமீபத்திய நலத்திட்டங்கள், பாதிப்பின் அளவையும், விரிவான, நீண்டகால...

சர்வதேச கண்காணிப்பை நோக்கி நகரும் செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்.!

சர்வதேச கண்காணிப்பை நோக்கி நகரும் செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்.!

by Mathavi
August 8, 2025
0

செம்மணி மனிதப்புதைகுழி குற்றத்துடன் சம்பந்தப்பட்ட பல்வேறு திடுக்கிடும் உண்மைகளை கூற தயாராக உள்ளதாக பிரதான குற்றவாளி சோமரத்ன ராஜபக்ஷ தெரிவிப்பு ⦁ யசிஹரன் ராஜகோபால் யாழ்ப்பாணம் செம்மணி...

இலங்கையின் பொருளாதார மீட்சியை நோக்கிய சர்ச்சைக்குரிய பாதை; இலங்கை – இந்தியாவுக்கு இடையிலான பாலம் சாத்தியமா?

இலங்கையின் பொருளாதார மீட்சியை நோக்கிய சர்ச்சைக்குரிய பாதை; இலங்கை – இந்தியாவுக்கு இடையிலான பாலம் சாத்தியமா?

by Mathavi
July 31, 2025
0

இலங்கை ஒரு சிக்கலான பொருளாதார மீட்சிப் பாதையில் ஒரு முக்கியமான கட்டத்தில் உள்ளது. இந்தக் காலகட்டத்தில், இந்தியாவுடனான இணைப்பை மேம்படுத்துவது குறித்த விவாதம் முக்கிய நிலையை எட்டியுள்ளது,...

பலஸ்தீன் மக்களுக்குத் தொடர்ச்சியாக உதவிகளை வழங்கும் சவூதி அரேபியா..!

பலஸ்தீன் மக்களுக்குத் தொடர்ச்சியாக உதவிகளை வழங்கும் சவூதி அரேபியா..!

by admin
July 5, 2025
0

பலஸ்தீன மக்களின் நலனுக்காகத் தொடர்ந்து மனிதாபிமான உதவிகளை வழங்கி வரும் முக்கியமான நாடாக சவூதி அரேபியா திகழ்கின்றது. பலஸ்தீன மக்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காகப் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு...

மூத்த தமிழ் அரசியல்வாதியான வீரசிங்கம் ஆனந்தசங்கரி 93வது வயதில் இன்று  கால்பதிக்கின்றார்

மூத்த தமிழ் அரசியல்வாதியான வீரசிங்கம் ஆனந்தசங்கரி 93வது வயதில் இன்று கால்பதிக்கின்றார்

by admin
June 14, 2025
0

1933ம் ஆண்டு ஆனி மாதம் 15ம் திகதி யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் பிறந்த ஆனந்தசங்கரி ஆரம்ப கல்வியை அச்சுவேலி அமெரிக்கன் மிசன் பாடசாலையிலும், இடைநிலைக் கல்வியை பருத்தித்துறை காட்லி...

2025 ஹஜ் ஏற்பாடு மிகச் சிறப்பு – சவூதி அரசின் அர்ப்பணிப்புக்கு முழு முஸ்லிம் சமூகமும் வாழ்த்து.

2025 ஹஜ் ஏற்பாடு மிகச் சிறப்பு – சவூதி அரசின் அர்ப்பணிப்புக்கு முழு முஸ்லிம் சமூகமும் வாழ்த்து.

by Mathavi
June 10, 2025
0

ஹஜ் என்பது இஸ்லாத்தின் ஜந்தாவது கடமையும் வசதி படைத்தவர்கள் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய ஆன்மீக கடமையாகும். வருடாவருடம் பல நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான முஸ்லிம்கள் அல்லாஹ்வின் பாதையில்...

மலையகத்தின் சிறந்த ஆளுமை – அமரர் ஆறுமுகன் தொண்டமானின் 5 ஆம் ஆண்டு சிரார்த்த தினம் இன்று

மலையகத்தின் சிறந்த ஆளுமை – அமரர் ஆறுமுகன் தொண்டமானின் 5 ஆம் ஆண்டு சிரார்த்த தினம் இன்று

by admin
May 26, 2025
0

கடந்த 5 வருடங்களுக்கு முன்பு இதுபோன்ற நாளில்தான் மலையகத்தின் ஆளுமைமிக்க தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான் இவ்வுலகுக்கு  விடைகொடுத்திருந்தார். 1964 ஆம் ஆண்டு மே மாதம் 29...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி