• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, May 31, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

சர்வதேச நீதிப் பொறிமுறை கோரி ஐ.நா. ஆணையாளருக்கு மகஜர் கையளிப்பு!

admin by admin
August 30, 2025
in இலங்கை செய்திகள்., யாழ் செய்திகள்
0
சர்வதேச நீதிப் பொறிமுறை கோரி ஐ.நா. ஆணையாளருக்கு மகஜர் கையளிப்பு!
Share on FacebookShare on Twitter

‘உள்நாட்டு விசாரணை பொறிமுறையை முற்றாக நிராகரித்து சர்வதேச நீதிப் பொறிமுறையே வேண்டும்’ என வடக்கு. கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கம் ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உயர்ஸ்தானிகரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தின் நிறைவில்
காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் ஐ. நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கான மகஜர் ஒன்றை ஜ.நா. வின் யாழ்ப்பாண அலுவலகத்தில் கையளித்தனர்.

அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “உள்நாட்டு விசாரனை பொறிமுறையை முற்றாக நிராகரித்து சர்வதேச நீதிப் பொறிமுறையை கோருகின்றோம்.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாகிய நாம், உலகளவில் அதிக எண்ணிக்கையிலான காணாமல் ஆக்கப்பட்டவர்களைக் கொண்ட ஒரு நாட்டில் நீதிக்கான எங்கள் போராட்டத்தில் உறுதியாக இருந்து வருகிறோம்.

இந்த சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில், நீதியை நிலைநாட்டுமாறு சர்வதேச சமூகத்தை மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்கிறோம்.

வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் என்பது உலகளவில் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் முழு மக்களுக்கும் எதிரான ஒரு ஆயுதமாக பயன்படுத்தப்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்துகிறது.

முதலாம் உலகப் போர் மற்றும் இரண்டாம் உலகப் போரின் போது தோன்றிய பலவந்தமாக காணாமல் ஆக்கப்படுதல்கள் இலங்கை போன்ற நாடுகளில் உள்ள சமூகங்களை இலக்கு வைத்து இன ஒடுக்குமுறையின் கருவியாக மாறியுள்ளன.

பலவந்தமாக காணாமல் ஆக்கப்படுதல் என்பது மிகவும் நயவஞ்சகமான ஆயுதமாகும், இது முழு சமூகத்திற்கும் நீண்டகால துயரத்தையும், உளவியல் சித்திரவதைகளையும் ஏற்படுத்துகிறது.

ஈழத்தைப் பொறுத்தவரையில், வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் முள்ளிவாய்க்காலில் ஆரம்பிக்கவில்லை. எமது உரிமைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலம் தொட்டே இலங்கை அரசானது ஈழத் தமிழ் மக்களுக்கு எதிரான திட்டமிட்ட இன ஒடுக்குமுறைக் கருவியாக இதனை பாவித்து வந்துள்ளனர்.

முள்ளிவாய்க்காலில் உச்சக்கட்டத்தை அடைந்த இலங்கையின் இனப்படுகொலை போரின் இறுதிக் கட்டத்தில், 146,679 பேர் கொல்லப்பட்டும், காணாமல் ஆக்கப்பட்டும் உள்ளனர். அவர்களது உறவினர்களால் இலங்கை பாதுகாப்புப் படையினரிடம் 21,000 இற்கும் மேற்பட்டவர்கள் ஒப்படைக்கப்பட்டு பலவந்தமாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலையின்
ஒரு திட்டமிட்ட தந்திரோபாயமாக இலங்கையால் பலவந்தமாக காணாமல் போகச் செய்தல் நிகழ்த்தப்பட்டுள்ளது.

இது அவர்களின் திட்டமிட்ட இனவழிப்புக்கு கணிசமாக பங்களித்துள்ளது, போரின் இறுதிக் கட்டத்தில், 59 இற்கும் மேற்பட்ட குழந்தைகள் இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கும் என்ன நடந்தது என சர்வதேசத்திடம் நீதி வேண்டி தொடர்ந்து போராடி வருகிறோம்.

59 இற்கும் மேற்பட்ட சிறுவர்கள் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்படுவதில் இலங்கை உலகில் முன்னணியில் உள்ளது. சிறுவர் உரிமைகளை நிலைநிறுத்தவும், இனப்படுகொலையை வரையறுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபை இலங்கை அரசை திருப்திப்படுத்துவதும், கால அவகாசம் கொடுப்பதும் எமது மக்களுக்கு ஆழ்ந்த வேதனையை அளிக்கின்றது,

தமிழர் உரிமைப் போராட்டத்தின் போது, வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் கொல்லப்பட்டவர்கள் உட்பட சரணடைந்தவர்களின் கதி என்ன என்பதை இலங்கை அரசு வெளிப்படுத்த சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுத்து மிக விரைவாக சர்வதேச விசாரணை ஆரம்பிக்க வேண்டும்.

போர் முடிவடைந்த பின்னர், பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோரின் 350 இற்கு மேற்பட்ட உறவினர்கள் நீதிக்காக போராடும் போது, தங்கள் அன்புக்குரியவர்களிற்கு என்ன நடந்தது என அறியாமலே இறந்துள்ளனர்.

இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய மனிதப் புதைகுழி மன்னாரில் உள்ள சதொசா புதைகுழி ஆகும். அங்கு 28 சிறுவர்களின் எலும்புக்கூடுகள் உட்பட 376 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன.

இலங்கையில் இரண்டாவது மனிதப் புதைகுழியாக தற்போது அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வரும் செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான புதைகுழி பதிவாகியுள்ளது. குழந்தைகள் உட்பட 169 பேரின் எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழியில் இருந்து 82 மனித உடல்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் நிறைவடைந்த நேரத்தில் 52 நபர்களின் எச்சங்கள் மீட்கப்பட்டன.

மேற்படி புதைகுழி எவையும் விசாரிக்கப்படவில்லை. அத்துடன் எமது தாயகத்தின் ஏனைய வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் சிங்கள இராணுவம் மற்றும் சிங்கள காடையாளர்களால் எம் உறவுகள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டதாக அடையாளப்படுத்தப்படும் இடங்களும் அகழ்வுப் பணிகள் நடைபெறவேண்டும். எனவே சர்வதேச, சுயாதீன விசாரணைக் குழுவை நியமிக்க வேண்டும் என ஐ. நா. மன்றத்தை கோருகின்றோம்.

இலங்கை தொடர்பாக கடந்த ஆகஸ்ட் 8 ஆம் திகதி A/HRC/60/21 இலக்கமிட்ட தங்களது அறிக்கை இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சில அடிப்படை பிரச்சினைகளை குறிப்பிட்டுள்ளது.

அந்த அறீக்கையில் நீங்கள் இதுவரை இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, குற்றவாளிகள், தண்டனைக்கு உட்படுத்தப்படாமல் கடந்த காலங்களில் இடம்பெற்ற கடுமையான மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட சர்வதேச போர்க் குற்றங்களுக்கு நீண்ட காலமாக தாமதித்து வந்த நீதியையும், பொறுப்புக்கூறலை உறுதி செய்யவும் தற்போதைய ஐனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு கிடைத்த வரலாற்று வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு இலங்கை அரசுக்கு இராஐதந்திர அடிப்படையில் நீங்கள் அழைப்பு விடுத்துள்ளீர்கள் பொறுப்புக்கூறல் தொடர்பான தங்களது மேற்படி கருத்து கடந்த 76 ஆண்டுகளாக ஸ்ரீலங்கா அரசினால் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டு தொடர்ந்தும் கட்டமைப்புசார் இனவழிப்புக்கு முகம் கொடுத்தவாறு சர்வதேச நீதிக்காக காத்திருக்கும் தமிழ் மக்களாகிய எமக்கு பாரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்வருகின்ற 8 ஆம் திகதி செம்டெம்பர் மாதம் தொடங்கவுள்ள ஐ. நா மனித உரிமை கூட்டத்தொடரில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடும் உரியவர்களுக்கு சர்வதேச நீதிப்பொறிமுறை ஊடாக உண்மை கண்டறியப்பட்ட பதில் விரைந்து வழங்குவதுடன், பாதிக்கப்பட்டோரின் சாட்சியங்களை பாதுகாக்க ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கை எடுக்க வேண்டும். திட்டமிட்ட இனப்படுகொலை மேற்கொண்ட இலங்கை அரசை சர்வதேச நீதிமன்றத்திடம் பாரப்படுத்தி விசாரனை ஆரம்பிக்க தீர்மானம் நிறைவேற்ற ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரையும், உறுப்பு நாடுகளையும் கோருகின்றோம். நீண்டகாலமாக பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு நீதியை வழங்குவதற்காக சர்வதேச பொறிமுறைகளின் ஊடாகவும் தீர்க்கமான நடவடிக்கைகளை விரைந்து எடுக்குமாறு சர்வதேச சமூகத்தை கேட்டுக்கொள்கிறோம்.

போர் முடிவடைந்து 16 வருடங்களாக நீதி கோரியும் பின் இன்றுடன் 3114 நாட்கள் தொடர்ச்சியாக வீதிப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். எமது போராட்டத்தை இலங்கை அரசால் அடக்க முடியாது. இன்று, எங்கள் அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மையைத் தேடுவதற்கு, இனப்படுகொலைக்கான நீதியை சர்வதேச பொறிமுறைகள் மூலம் தேடுகின்ற எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்” என்று அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts

தமிழர் தாயகத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் பிரான்ஸ் பொலிசாரால் சுட்டுக் கொலை!

தமிழர் தாயகத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் பிரான்ஸ் பொலிசாரால் சுட்டுக் கொலை!

by selvan
May 31, 2026
0

பிரான்ஸ், Bobigny பகுதியில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஈழத்தமிழ் குடும்பத்தலைவர் ஒருவர் உயிரிழந்த செய்தி பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் அளிக்கிறது. இந்தச் சம்பவம் குறித்து...

புதிய தாதியர் நியமனங்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்

புதிய தாதியர் நியமனங்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்

by selvan
May 31, 2026
0

இந்த வருடம் ஒக்டோபர் மாதத்திற்குள் மேலும் 2,867 புதிய தாதியர் நியமனங்கள் வழங்கப்படும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற...

மின்வெட்டு தொடர்பில் சஜித்தின் குற்றச்சாட்டு

மின்வெட்டு தொடர்பில் சஜித்தின் குற்றச்சாட்டு

by selvan
May 31, 2026
0

மின்வெட்டுக்கு முதலில் ஒரு குரங்கு மீது பழி சுமத்திய அரசாங்கம், பின்னர் அதனை கடந்த அரசாங்கங்கள் மீது சுமத்தியதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்....

நிறைவுக்கு வரும் சிவனடி பாத மலை யாத்திரைக் காலம்.

நிறைவுக்கு வரும் சிவனடி பாத மலை யாத்திரைக் காலம்.

by selvan
May 31, 2026
0

2025/2026 சிவனடி பாத மலை பருவ காலம் கடந்து 2025 டிசம்பர் மாதம் பௌர்ணமி நாளில் ஆரம்பமானது. தொடர்ந்து ஆறு மாதங்களாக இப் பருவகாலம் இடம் பெற்று...

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற நான்கு விபத்துக்களில் நால்வர் உயிரிழப்பு!

வெள்ளவத்தையில் புகையிரதத்தில் மோதி பெண் ஒருவர் பலி!

by selvan
May 31, 2026
0

கொழும்பு வெள்ளவத்தை புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரதத்தில் மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். பாணந்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதியதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. உயிரிழந்த...

தற்போதைய அரசு தமக்கு நெருக்கமான ஒரு சில குழுக்களுக்குச் சாதகமாகவே செயற்படுகிறது!

தற்போதைய அரசு தமக்கு நெருக்கமான ஒரு சில குழுக்களுக்குச் சாதகமாகவே செயற்படுகிறது!

by selvan
May 31, 2026
0

தற்போதைய அரசு தமக்கு அரசியல் ரீதியாக நெருக்கமான ஒரு சில குறிப்பிட்ட வணிகக் குழுக்களுக்குச் சாதகமாகவே தொடர்ந்து அநாவசிய முடிவுகளை எடுத்து வருகின்றது" என ஸ்ரீலங்கா பொதுஜன...

பேருந்துக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டாது!

பேருந்துக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டாது!

by selvan
May 31, 2026
0

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் டீசல் விலையை உயர்த்திய போதிலும், பேருந்து கட்டணங்களில் எந்தவொரு திருத்தமும் மேற்கொள்ளப்பட மாட்டாது...

சூரிய மின் உற்பத்தித் தகடுகளை செயலிழக்கச் செய்யுமாறு கோரிக்கை

சூரிய மின் உற்பத்தித் தகடுகளை செயலிழக்கச் செய்யுமாறு கோரிக்கை

by selvan
May 31, 2026
0

திடீர் மின் தடை ஏற்படுவதைத் தவிர்த்து, மின் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பேணும் நோக்கில், இன்றைய தினமும் (31) முற்பகல் 8.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி...

முச்சக்கர வண்டி கட்டணங்களையும் உயர்த்துவதற்கு தீர்மானம்!

முச்சக்கர வண்டி கட்டணங்களையும் உயர்த்துவதற்கு தீர்மானம்!

by selvan
May 31, 2026
0

எரிபொருள் விலை திருத்தத்திற்கு இணையாக, முச்சக்கர வண்டி கட்டணங்களையும் உயர்த்துவதற்கு எதிர்பார்ப்பதாக தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் தொழிலதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, கட்டண...

பருத்தித்துறை கடற்ப்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவர்களைக் காணவில்லை!

பருத்தித்துறை கடலில் காணாமல் போன நான்கு மீனவர்களைத் தேடுவதற்கு இந்தியாவின் உதவி கோரப்பட்டுள்ளது!

by selvan
May 31, 2026
0

பருத்தித்துறை கடலிலிருந்து மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன நான்கு மீனவர்களைத் தேடுவதற்கு இந்தியாவின் உதவியை நாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை, சர்வதேச கடலில் தேடுவதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளதாகக் கடற்றொழில்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி