செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வுப் பணிகள் இன்றைய தினம் (26) இரண்டாம் நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, ஏற்கனவே அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வாய்வுத் தளங்களை மேலும் விஸ்தரிக்கும் நடவடிக்கைகளின்போது புதிதாக 16 என்புத் தொகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
அவற்றில் சிறுவர்களுடையது என சந்தேகிப்படும் என்புத் தொகுதிகளும், ஆடையை ஒத்த துணியும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளுக்காக நீதிமன்றம் 45 நாட்கள் அனுமதி வழங்கியுள்ள நிலையில், இன்றைய தினம் 34 ஆவது நாளாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணியில் 16 என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அதேவேளை கட்டம் கட்டமாக 42 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகளின் போது, 150 என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் அவை முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்றைய தினம் புதிதாக 16 என்புத் தொகுதிகளுடன் மொத்தமாக 166 என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.











