• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, May 21, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

மனிதப் புதைகுழிகள் தொடர்பில் சுயாதீனமானதும், பக்கச்சார்பற்றதுமான விசாரணைகள் அவசியம்.!

Mathavi by Mathavi
August 10, 2025
in இலங்கை செய்திகள்.
0
மனிதப் புதைகுழிகள் தொடர்பில் சுயாதீனமானதும், பக்கச்சார்பற்றதுமான விசாரணைகள் அவசியம்.!
Share on FacebookShare on Twitter

மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் சுயாதீனமானதும், பக்கச்சார்பற்றதும், பாதிக்கப்பட்ட தரப்பினரை மையப்படுத்தியதுமான செயன்முறைக்குத் துணையளிக்கக்கூடிய சட்ட மற்றும் கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளுமாறும், அவற்றின் இயலுமையை வலுப்படுத்துமாறும் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடம் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்கிசோதி சரவணமுத்துவினால் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

இலங்கையில் உண்மை மற்றும் நீதியை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய மறுசீரமைப்புக்கள் தொடர்பில் நாம் பல தசாப்த காலமாக வலியுறுத்தி வருகின்றோம். அந்தவகையில் மனிதப் புதைகுழிகள் தொடர்பில் சம காலத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் இலங்கையின் கடந்தகால வன்முறைகளுடன் தொடர்புடைய விவகாரங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும். மனிதப்புதைகுழி விவகாரத்தில் தடயவியல் ஆய்வு உள்ளடங்கலாக அரசினால் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளைப் பாராட்டும் அதேவேளை, இவ்விடயத்தில் உண்மையைக் கண்டறிவதற்கும், நீதியைப் பெற்றுக்கொள்வதற்கும் உரியவாறான நிபுணத்துவம் மற்றும் வளங்கள் என்பன உடனடியாகத் தேவைப்படுகின்றன. அதற்கமைய மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் சுயாதீனமானதும், பக்கச்சார்பற்றதும், பாதிக்கப்பட்ட தரப்பினரை மையப்படுத்தியதுமான செயன்முறைக்குத் துணையளிக்கக்கூடிய சட்ட மற்றும் கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளுமாறும், அவற்றின் இயலுமையை வலுப்படுத்துமாறும் கோருகின்றோம்.

வட, கிழக்கு மாகாணங்களை மையப்படுத்தி இயங்கி வருபவர்கள் உள்ளடங்கலாக இதனுடன் தொடர்புடைய பல்வேறு தரப்பினரிடமும் நடாத்திய நேர்காணல்களில் சில முக்கிய விடயங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன.

தடயவியல் நிபுணத்துவத்தை வலுப்படுத்தல், சுயாதீனமான முறையில் மரபணு பரிசோதனையை மேற்கொள்வதற்கு அவசியமான வளப்பகிர்வு மற்றும் மறுசீரமைப்புக்களுக்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தல், சுயாதீன விசாரணைகள் மற்றும் வழக்குத்தொடரலுக்கு அவசியமான நகர்வுகளை மேற்கொள்ளல், மனிதப்புதைகுழி அகழ்வின்போது உரியவாறான நியமங்கள் பின்பற்றப்படுவதை உறுதிசெய்தல், மனிதப்புதைகுழி அகழ்வு மற்றும் விசாரணை செயன்முறைகளில் சர்வதேச கண்காணிப்பு மற்றும் ஒத்துழைப்பை உள்வாங்கல், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான உளவியல்சார் உதவிகளை வழங்கல், பாதிக்கப்பட்ட தரப்பினரை மையப்படுத்திய செயன்முறையைக் கையாளல், இவ்விவகாரம் தொடர்பான விசாரணைகள் மற்றும் வழக்குத்தொடரல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கான வளங்களை ஒதுக்கீடு செய்தல் என்பனவே அவையாகும்.

வலிந்து காணாமலாக்கப்படல்கள், மனிதப்புதைகுழி அகழ்வுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏனைய விவகாரங்கள் தொடர்பில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகிய கட்டமைப்புக்களால் குறிப்பிடத்தக்களவு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இக்கட்டமைப்புக்களின் செயற்பாடுகளில் எவ்வித அரசியல் தலையீடும் மேற்கொள்ளப்படாதிருப்பதை உறுதிப்படுத்துவதற்கும், அவை சுயாதீனமாக இயங்குவதற்கு அவசியமான வளங்களை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Posts

கட்டுப்பாடற்ற ரூபாய் வீழ்ச்சியால் மக்கள் மீது பாரிய சுமை.!

கட்டுப்பாடற்ற ரூபாய் வீழ்ச்சியால் மக்கள் மீது பாரிய சுமை.!

by Mathavi
May 21, 2026
0

தற்போதைய அரசின் முறையற்ற பொருளாதார முகாமைத்துவம் மற்றும் கட்டுப்பாடற்ற ரூபாய் வீழ்ச்சி காரணமாக, ஒட்டுமொத்த பொதுமக்களும் மிகக் கடுமையான வாழ்க்கைச் செலவு மற்றும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ள...

அரிசி இறக்குமதிக்கு கடும் எதிர்ப்பு வெளியிட்ட ரவிகரன் எம்.பி.!

அரிசி இறக்குமதிக்கு கடும் எதிர்ப்பு வெளியிட்ட ரவிகரன் எம்.பி.!

by Mathavi
May 21, 2026
0

நாட்டில் ஏற்பட்டுள்ள சம்பா மற்றும் கீரி சம்பா அரிசித் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்காக, பொன்னி சம்பா மற்றும் பால்பொன்னி உள்ளிட்ட GR11 அரிசி வர்க்கங்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி...

திலாப்பியா மீன் பதனிடும் நிலைய திறப்பு விழா.!

திலாப்பியா மீன் பதனிடும் நிலைய திறப்பு விழா.!

by Mathavi
May 21, 2026
0

நோர்வே மற்றும் அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் நிதியுதவியில் (ILO) சர்வதேச தொழிலாளர் அமைப்பினால் செயற்படுத்தப்பட்ட திலாப்பியா மீன் பதனிடும் நிலைய திறப்பு விழா இன்று இரணைமடு குளத்தில் நடைபெற்றது....

இலங்கை பெரும் ஆபத்தில்; சர்வதேச நாணய நிதியத்துடன் உடனே அடுத்த கட்ட பேச்சுகளை ஆரம்பியுங்கள்.!

இலங்கை பெரும் ஆபத்தில்; சர்வதேச நாணய நிதியத்துடன் உடனே அடுத்த கட்ட பேச்சுகளை ஆரம்பியுங்கள்.!

by Mathavi
May 21, 2026
0

இலங்கை தற்போது புதியதொரு பொருளாதார மரணப் பொறிக்குள் சிக்கி, நாடு பெரும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது என்று எச்சரித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, தற்போதைய திட்டம் முடிவடைவதற்கு...

குளத்தில் மீன்பிடிக்கச் சென்றவருக்கு நேர்ந்த கதி.!

குளத்தில் மீன்பிடிக்கச் சென்றவருக்கு நேர்ந்த கதி.!

by Mathavi
May 21, 2026
0

இரணைமடுக்குளத்தில் தூண்டில் மீன் பிடிப்பதற்காக சென்ற 65 வயதானவர் மீது யானை தாக்கியதில் படுகாயம் அடைந்துள்ளார். குறித்த சம்பவமானது இன்று காலை இடம்பெற்றுள்ளது. தூண்டிலில் மீன்பிடிப்பதற்காக சைக்கிளில்...

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு வீழ்ச்சி.!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு வீழ்ச்சி.!

by Mathavi
May 21, 2026
0

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மத்திய வங்கி இன்று உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ள நாணய மாற்று...

ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.!

ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.!

by Mathavi
May 21, 2026
0

இரத்தினபுரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெரளுகஹபிட்டிய பகுதியில் உள்ள களு கங்கையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று புதன்கிழமை (20) களு...

சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜிற்கு சபையில் அஞ்சலி செலுத்தினார் ரவிகரன் எம்.பி.!

சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜிற்கு சபையில் அஞ்சலி செலுத்தினார் ரவிகரன் எம்.பி.!

by Mathavi
May 21, 2026
0

விடுதலைப்புலிகள் அமைப்பின் மூத்த தளபதியும் சமர்க்கள நாயகனுமான பிரிகேடியர் பால்ராஜ் அவர்களுக்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார். நாடாளுமன்றில் இன்று...

மாற்றுத்திறனாளிகள் விடயத்தில் அரச செயற்பாடுகள், அமுல்படுத்தல்கள் திருப்தியாக இல்லை.!

மாற்றுத்திறனாளிகள் விடயத்தில் அரச செயற்பாடுகள், அமுல்படுத்தல்கள் திருப்தியாக இல்லை.!

by Mathavi
May 21, 2026
0

மாற்றுத் திறனாளிகளை பாதுகாப்பதற்கான சட்டங்கள், ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சமவாயங்களில் அரசு கையெழுத்திட்டுள்ள போதும் நடைமுறைப்படுத்தல்கள் திருப்தி தருவதாக இல்லை என வலிகாமம் கிழக்கு பிரதேச...

பொலிஸ் பரிசோதகர் சுட்டுக் கொ*லை; உந்துருளி ஓட்டுநர் கைது.!

போலி அமெரிக்க டொலர் நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது.!

by Mathavi
May 21, 2026
0

கொழும்பு, வெள்ளவத்தையில் போலி அமெரிக்க டொலர் நாணயத்தாள்களுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட 43 வயதுடைய சந்தேகநபர் தலவாக்கலை பகுதியைச் சேர்ந்தவர்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி