இன்று (10) தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் கலந்து கொள்ளும் அன்புத் துளிர்களான அனைத்து மாணவ, மாணவிகளுக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இந்த பரீட்சை என்பது உங்கள் முயற்சியின் பலனையும், உழைப்பின் இனிமையையும் அளிக்கும் பொற்காலம்.
நம்பிக்கையை உங்கள் தோழனாகக் கொள்ளுங்கள், மனஅமைதியை உங்கள் கவசமாகக் கொள்ளுங்கள், திறமையை உங்கள் ஆயுதமாகக் கொள்ளுங்கள்.
நீங்கள் காட்டிய முயற்சி, தியாகம், ஒழுக்கம் அனைத்தும் நாளை வெற்றியின் வடிவில் உங்களிடம் திரும்பி வரட்டும். பரீட்சை கேள்விப் பத்திரம் உங்கள் அறிவின் வெளிப்பாட்டுக்கான ஓர் வெற்று தாளாக இருக்கும். அதில் உங்கள் கனவுகளையும் உழைப்பையும் நிரப்புங்கள்.
எத்தனை சவால்கள் வந்தாலும், உங்கள் மனதில் “என்னால் முடியும்” என்ற உறுதி நிலைத்திருக்கட்டும்.
அல்லாஹ்வின் அருளும் ஆசீர்வாதமும் என்றும் உங்களுடன் இருந்து, உங்கள் கல்விப் பயணம் ஒளிமிகு எதிர்காலத்துக்கு வழிவகுக்கட்டும் என்று மனமாற பிரார்த்திக்கிறேன்.
உங்கள் ஒவ்வொரு அடியும் வெற்றியின் பாதையில் விழுந்திட வாழ்த்துக்கள் என கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபகருமான ரஹ்மத் மன்சூர் தெரிவித்துள்ளார்.










