யாழில் உடல் சுகயீனம் ஏற்பட்ட இளைஞன் ஒருவர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.
நாவற்குழி தெற்கு, கைதடி பகுதியைச் சேர்ந்த சுந்தரலிங்கம் தேனுசன் (வயது 29) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
இவருக்கு கடந்த 31ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்டது. பின்னர் 1ஆம் திகதி மாலை நெஞ்சுவலி ஏற்பட்டது. இந்நிலையில் இரவு 7 மணிக்கு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 3.00 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். சாட்சிகளை சாவகச்சேரி பொலிஸார் நெறிப்படுத்தினர்.
உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
Related Posts
சுரேஷ் சலேயின் கோரிக்கைகள் நீதிமன்றத்தால் நிராகரிப்பு!
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளில் இருந்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி...
அம்பாறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
அம்பாறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால், வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலின் கீழ், சாதாரண தர மற்றும் உயர்தர...
குருநாகலில் விபத்து – இரு இளைஞர்கள் பலி!
குருநாகல் மாவட்டம், பொத்துஹெர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு - குருநாகல் பிரதான வீதியின் ரஞ்சனகம சந்தியில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கோர வீதி விபத்தில் இளைஞர்கள் இருவர்...
தனது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டார் சுரேஷ் சாலே!
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, தனது உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று கைவிட்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு...
வவுனியா மாநகர சபையின் முன்னாள் முதல்வர் காண்டீபனைக் கைது செய்யுமாறு உத்தரவு!
வவுனியா மாநகர சபையின் முன்னாள் முதல்வர் உள்ளிட்ட நான்கு பேரைக் கைது செய்ய வவுனியா நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது என்று வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையப்...
மட்டக்களப்பில் தீப்பரவல் – பல உணவகங்கள் தீக்கிரை!
மட்டக்களப்பு பார் வீதியில் அமைந்துள்ள உணவகக் கடைத் தொகுதி ஒன்றில் இன்று புதன்கிழமை காலை 9 மணியளவில் திடீரெனப் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தத் தீப்பரவலில்...
தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யுடன் இலங்கைத் துணைத் தூதுவர் சந்திப்பு.!
தமிழக முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்யை தென்னிந்தியாவுக்கான இலங்கைத் துணைத் தூதுவர் டாக்டர் கணேசநாதன் கதீஸ்வரன் இன்று நேரில் சந்தித்துப் பேசினார். சென்னையிலுள்ள தமிழக அரசுத் தலைமைச் செயலகத்தில்...
பொதுச் சுகாதார நடவடிக்கைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல்.!
கல்முனை பிராந்திய மக்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படும் பொதுச் சுகாதார நடவடிக்கைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள்...
நோய்வாய்ப்பட்ட யானைக்கு வனவிலங்கு அதிகாரிகள் தீவிர சிகிச்சை.!
அம்பாறை பிராந்திய வனவிலங்கு சுகாதார மேலாண்மைப் பிரிவின் கால்நடை அதிகாரி டாக்டர் டி.பி.என். புஷ்பகுமார உள்ளிட்ட வனவிலங்கு அதிகாரிகள் குழுவினர் லஹுகல தேசியப் பூங்காவின் செங்கமுவ இஸ்மத்த...
அம்பாறையில் பொசன் திருவிழா.!
பொசன் விழாவையொட்டி, அம்பாறை நகரில் அமைக்கப்பட்டிருந்த பொசன் வலயத்தின் ஐந்து தோரணங்கள், விளக்குகள் ஒளிர்விக்கப்பட்டு, பொதுமக்கள் அவற்றைக் பார்வையிடுவதற்கான ஏற்பாடுகள் நேற்று செவ்வாய்க்கிழமை(30) மாலை செய்யப்பட்டிருந்தன. அம்பாறை...










