வட மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையுடன் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகமும், வடமராட்சி கிழக்கு கலாச்சார பேரவையும் வருடந்தோறும் இணைந்து நடத்தும் நடப்பு ஆண்டுக்கான வடமராட்சி கிழக்கு பண்பாட்டுப் பெருவிழா நாளைய தினம் (30) திட்டமிட்டு அதிகாரபூர்வமாக உறுதிபடுத்தபட்ட நிலையில் சில கலைஞர்களின் தலையீட்டால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இடைநிறுத்தப்பட்ட காரணங்கள் தொடர்பாக தெரியவருவதாவது, இம்முறை வடமராட்சி கிழக்கில் உள்ள அனைத்து கலாமன்றங்களும் பண்பாட்டுப் பெருவிழாவில் உள்ளெடுக்கப்படாத நிலை, விருதுகளுக்காக கலைஞர்கள் தெரிவு செய்யப்பட்ட முறைமையில் பாகுபாடு, கலைஞர்களின் தகுதி மற்றும் பண்பாட்டுப் பெருவிழாவின் நிகழ்ச்சி நிரல், நிகழ்வுகளின் தெரிவு போன்ற பல காரணங்களால் கலைஞர்கள் மற்றும் வடமராட்சி கிழக்கு கலாச்சார உத்தியோகத்தருக்கும் இடையில் சிறிய முரன்பாட்டு நிலை காணப்பட்டது.
அதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட கலைஞர்கள் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகரை நேரடியாக சந்தித்து தமது பிரச்சினைகள் தொடர்பாக முறைப்பாடு செய்தபோது இதனை உடனடியாக கருத்தில் கொண்டு பிரதேச செயலாளர் நாளைய தினம் நடைபெற இருந்த பண்பாட்டுப் பெருவிழாவை காலவரையறை இன்றி இடைநிறுத்தி உள்ளார்.











