• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, July 1, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

ஆளுநர் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடல்..!

admin by admin
July 8, 2025
in இலங்கை செய்திகள்., யாழ் செய்திகள்
0
ஆளுநர் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடல்..!
Share on FacebookShare on Twitter

வடக்கு மாகாணத்தில் மணல் விநியோகத்தை சீராக்குவது, சுண்ணாம்புக்கல் அகழ்வு மற்றும் விநியோகத்தை ஒழுங்கு முறைப்படுத்துவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (08) நடைபெற்றது.

அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்படும் வீட்டுத்திட்டங்கள் மற்றும் அரசாங்க திணைக்களங்களால் முன்னெடுக்கப்படும் வேலைத் திட்டங்களுக்கே மணலை அதிக விலையில் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலைமை இருப்பது தொடர்பில் குறிப்பிட்ட ஆளுநர், இது தொடர்பில் மீண்டும் மீண்டும் ஆராய்ந்து கொண்டிருக்காமல் முடிவு எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

இதற்கு அமைவாக, கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களில் சில ஆற்றுப்படுக்கைகள், குளங்களிலிருந்து மணலை கழுவி எடுத்துப் பயன்படுத்த முடியும் என்பதுடன் அதற்கான இடங்களை விரைவாக அடையாளப்படுத்துமாறும், உள்ளூராட்சி மன்றங்களின் பொறுப்பில் ‘யாட்’ அமைத்து அங்கிருந்து நியாய விலையில் விநியோகம் நடைபெறுவதை உறுதிப்படுத்தும் பொறிமுறையை உடனடியாக ஆரம்பிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்டத்தில் கல்மடுக் குளத்தில் ஏற்கனவே கழுவி எடுக்கப்பட்ட மணல் கரைச்சிப் பிரதேச சபை ஊடாக விநியோகிக்கப்படவுள்ளமை தொடர்பிலும் கலந்துரையாடலில் தெரியப்படுத்தப்பட்டது.

இதேவேளை சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் ஒப்பந்தகாரர்கள் மற்றும் மாவட்டச் செயலர்கள் சுட்டிக்காட்டினர். ஒரு சில பொலிஸாருக்குச் சொந்தமான டிப்பர் வாகனங்களும் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன என்றும் அதன் காரணமாகவே இதனைக் கட்டுப்படுத்த முடியாத நிலைமை இருப்பதாகவும் தெரியப்படுத்தப்பட்டது.

மக்களுக்கு நியாயமான விலையில் மணல் தாரளமாக கிடைப்பதை உறுதி செய்வதன் ஊடாக இதனைக் குறைக்க முடியும் என ஆளுநர் குறிப்பிட்டார். அதற்கு உடனடியாக பிரதேச சபைகள் ஊடாக ‘யாட்’ அமைத்து விநியோகத்தை ஆரம்பிப்பதற்கு ஏதுவாக மாவட்டச் செயலர்கள் தமது மாவட்ட மட்டத்தில் கலந்துரையாடல்களை நடத்துமாறும் ஆளுநர் பணித்தார்.

மணல் அகழ்வுக்குரிய இடத்திலிருந்து குறிப்பிட்டளவு தூரத்தில் ‘யாட்’ அமைக்கப்படுவதுடன் அதற்காகப் பயன்படுத்தப்படும் டிப்பர்களுக்கு ‘ஜி.பி.எஸ்.’ கருவிகள் பொருத்தி கண்காணிக்க வேண்டும்.

மேலும் மணல் அகழ்வுக்கு எத்தனை நாட்கள் என்பது ஒதுக்கப்பட வேண்டும். இதன் மூலம் மணல் அகழ்வு நடவடிக்கையை முழுமையாகக் கண்காணித்து கட்டுப்படுத்த முடியும் என யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் ம.கபிலன் குறிப்பிட்டார். ஆளுநர், மாவட்டச் செயலர்கள், புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் உள்ளிட்ட திணைக்களத் தலைவர்கள் இந்த யோசனையை ஏற்றுக்கொண்டனர்.

கொள்கை ரீதியாக நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவாக யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், கௌரவ அமைச்சருமான இ.சந்திரசேகரன் ஊடாக அமைச்சரவைக்கு இந்த யோசனை சமர்பிக்கப்பட்டு அமைச்சரவைத் தீர்மானமாக இதனை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் ம.கபிலன் சுட்டிக்காட்டினார்.

இதேபோன்று சுண்ணக்கல் அகழ்வு தொடர்பிலும் சுற்றறிக்கைகள் தெளிவாக உள்ள போதும் பொலிஸார் அதனை நடைமுறைப்படுத்தவில்லை என கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் குறிப்பிட்டார். பொலிஸாருக்கு இறுக்கமான அறிவுறுத்தல் ஒன்றை வழங்குமாறும் ஆளுநரை அவர் கேட்டுக்கொண்டார். சுண்ணக்கல் சிறிய துகளாக்கப்பட்ட நிலையில் கொண்டு செல்லப்பட்டாலும் அதற்கு புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் அனுமதி தேவை என்ற நிலையில் பணியகத்தால் எந்தவொரு அனுமதியும் வழங்கப்பட்டிருக்காத சூழலிலும் அவை கொண்டு செல்லப்படுகின்றன என பணியகத்தின் பிராந்திய சுரங்கப் பொறியியலாளர் சுட்டிக்காட்டினார். பொலிஸாரை அழைத்து இது தொடர்பில் அறிவுறுத்தல் விடுத்து நடைமுறைப்படுத்துவதாக ஆளுநர் குறிப்பிட்டார்.

இந்தக் கலந்துரையாடலில் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் ம.கபிலன், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் – பொறியியல், வடக்கு மாகாண நீர்பாசனத் திணைக்களப் பணிப்பாளர், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார் மாவட்டச் செயலாளர்கள், கிளிநொச்சி மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் பிராந்திய பொறியியலாளர், வடக்கு மாகாண கட்டடங்கள் திணைக்களப் பணிப்பாளர், ஒப்பந்தகாரர்கள் சங்க நிர்வாகத்தினர் ஆகியோர் பங்கேற்றனர்.

Related Posts

சுரேஷ் சலேயின் கோரிக்கைகள் நீதிமன்றத்தால் நிராகரிப்பு!

by selvan
July 1, 2026
0

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளில் இருந்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி...

அம்பாறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால்   மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

அம்பாறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால்   மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

by selvan
July 1, 2026
0

அம்பாறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால், வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலின் கீழ், சாதாரண தர மற்றும் உயர்தர...

கோர விபத்துக்களில் இருவர் பரிதாபப் பலி! 

குருநாகலில் விபத்து – இரு இளைஞர்கள் பலி!

by selvan
July 1, 2026
0

குருநாகல் மாவட்டம், பொத்துஹெர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு - குருநாகல் பிரதான வீதியின் ரஞ்சனகம சந்தியில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கோர வீதி விபத்தில் இளைஞர்கள் இருவர்...

சுரேஷ் சலேவுக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்பில்லை – சரத் வீரசேகர தெரிவிப்பு.!

தனது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டார் சுரேஷ் சாலே!

by selvan
July 1, 2026
0

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, தனது உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று கைவிட்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு...

வவுனியா மாநகர சபையின் முன்னாள் முதல்வர் காண்டீபனைக் கைது செய்யுமாறு உத்தரவு!

வவுனியா மாநகர சபையின் முன்னாள் முதல்வர் காண்டீபனைக் கைது செய்யுமாறு உத்தரவு!

by selvan
July 1, 2026
0

வவுனியா மாநகர சபையின் முன்னாள் முதல்வர் உள்ளிட்ட நான்கு பேரைக் கைது செய்ய வவுனியா நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது என்று வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையப்...

மட்டக்களப்பில் தீப்பரவல் – பல உணவகங்கள் தீக்கிரை!

by selvan
July 1, 2026
0

மட்டக்களப்பு பார் வீதியில் அமைந்துள்ள உணவகக் கடைத் தொகுதி ஒன்றில் இன்று புதன்கிழமை காலை 9 மணியளவில் திடீரெனப் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தத் தீப்பரவலில்...

தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யுடன் இலங்கைத் துணைத் தூதுவர் சந்திப்பு.!

தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யுடன் இலங்கைத் துணைத் தூதுவர் சந்திப்பு.!

by Mathavi
July 1, 2026
0

தமிழக முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்யை தென்னிந்தியாவுக்கான இலங்கைத் துணைத் தூதுவர் டாக்டர் கணேசநாதன் கதீஸ்வரன் இன்று நேரில் சந்தித்துப் பேசினார். சென்னையிலுள்ள தமிழக அரசுத் தலைமைச் செயலகத்தில்...

பொதுச் சுகாதார நடவடிக்கைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல்.!

பொதுச் சுகாதார நடவடிக்கைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல்.!

by Mathavi
July 1, 2026
0

கல்முனை பிராந்திய மக்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படும் பொதுச் சுகாதார நடவடிக்கைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள்...

நோய்வாய்ப்பட்ட யானைக்கு வனவிலங்கு அதிகாரிகள் தீவிர சிகிச்சை.!

நோய்வாய்ப்பட்ட யானைக்கு வனவிலங்கு அதிகாரிகள் தீவிர சிகிச்சை.!

by Mathavi
July 1, 2026
0

அம்பாறை பிராந்திய வனவிலங்கு சுகாதார மேலாண்மைப் பிரிவின் கால்நடை அதிகாரி டாக்டர் டி.பி.என். புஷ்பகுமார உள்ளிட்ட வனவிலங்கு அதிகாரிகள் குழுவினர் லஹுகல தேசியப் பூங்காவின் செங்கமுவ இஸ்மத்த...

அம்பாறையில் பொசன் திருவிழா.!

அம்பாறையில் பொசன் திருவிழா.!

by Mathavi
July 1, 2026
0

பொசன் விழாவையொட்டி, அம்பாறை நகரில் அமைக்கப்பட்டிருந்த பொசன் வலயத்தின் ஐந்து தோரணங்கள், விளக்குகள் ஒளிர்விக்கப்பட்டு, பொதுமக்கள் அவற்றைக் பார்வையிடுவதற்கான ஏற்பாடுகள் நேற்று செவ்வாய்க்கிழமை(30) மாலை செய்யப்பட்டிருந்தன. அம்பாறை...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி