• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, June 12, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

யாழில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்..!

admin by admin
June 25, 2025
in இலங்கை செய்திகள்., யாழ் செய்திகள்
0
யாழில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்..!
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழி்ல் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமானது கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் தலைமையில், கடற்றொழி்ல் பிரதி அமைச்சர் கௌரவ ரத்ன கமகே மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் கெளரவ நாகலிங்கம் வேதநாயகன் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இன்றைய தினம் (25.06.2025) காலை 09.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் வரவேற்புரையாற்றுகையில், கூட்டத்திற்கு வருகை தந்த கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களையும், பிரதி அமைச்சர் கௌரவ ரத்ன கமகே அவர்களையும், வடக்கு மாகாண ஆளுநர் கெளரவ நாகலிங்கம் வேதநாயகன், கெளரவ நாடாளுமன்ற உறுப்பினர் கெளரவ ஜெயசந்திரமூர்த்தி ரஜீவன் உள்ளிட்ட அனைவரையும் வரவேற்றதுடன், யாழ்ப்பாண மாவட்டத்தின் வாழ்வாதாரத்தில் விவசாய மற்றும் மீன்பிடி பிரதானமானது எனவும், அந்த வகையில் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கேட்டறிந்து பொருத்தமான இயலளவான தீர்வுகளைக் காண்பதற்காக இவ்வாறான கூட்டத்தினை ஒழுங்கு செய்த கெளரவ அமைச்சர் அவர்களுக்கும் நன்றியினைத் தெரிவித்தார்.

கடற்றொழி்ல் நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சருமான, யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான, கெளரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் தலைமையுரையாற்றுகையில், கடற்றொழி்ல் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கண்டறிந்து, அவற்றுக்கு விரைவான, முடியுமான ,உயர்ந்தபட்ச தீர்வுகளை வழங்குவதே இக் கூட்டத்தின் முக்கிய நோக்கம் எனவும், நாடு தழுவிய ரீதியாக குறிப்பாக பிரதானமான கடல்வளங்களை அண்டிய 15 மாவட்டங்களில் கடற்றொழி்ல் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தினை நடத்தி பிரச்சினைகளை ஆராய்ந்து வருவதாகவும், அந்தவகையில் இதுவே யாழ்ப்பாண மாவட்டத்தின் முதலாவது கூட்டம் எனவும் தெரிவித்தார்.

மேலும், இக் கூட்டத்தினை மூன்று மாதத்திற்கு ஒரு தடவை நடாத்தவுள்ளதாகவும், மூன்று வார முன்னறிவித்தலின் அடிப்படையில் கூட்டம் நடாத்தப்படும் எனவும், கூட்டத்திற்கு முன்னர் தங்களின் ஆலோசனைகள் பரிந்துரைகள் பிரச்சினைகளை எழுத்து மூலம் அரசாங்க அதிபருக்கு அனுப்பி வைக்கப்படும் பட்சத்தில் எம்மால் சம்பந்தப்பட்ட உரிய அதிகாரிகளை அழைத்து ஒருங்கிணைத்து விரைவான தீர்வுகளை காணமுடியும் எனவும் கெளரவ அமைச்சர் தெரிவித்தார்.

இக் கூட்டத்தில் கலந்து கொண்ட கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் கௌரவ ரத்ன கமகே அவர்கள் கருத்து தெரிவிக்கையில், அரசாங்கம் கொள்கை ரீதியான முடிவுகளை அமைச்சில் எடுத்தாலும், பிரதேச மட்டத்தில் உள்ளூர் அமைப்புக்களை ஒன்றிணைத்து தீர்வுகளை காண வேண்டும் என்ற நோக்கத்துடன் இக் கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது எனவும், யாழ்ப்பாண மாவட்டத்தில் கடற்றொழி்ல் சார்ந்த குடும்பங்கள் மாவட்ட சனத்தொகையில் அண்ணளவாக 38% ஆகவுள்ளதாகவும், அதனால் விசேடமாக கவனிக்கப்பட வேண்டிய மாவட்டமாகவுள்ளது எனவும் தெரிவித்தார்.

மேலும் அதிமேதகு ஜனாதிபதி கடற்றொழி்ல் விடயத்தில் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும், குறுகிய காலத்தில் தீர்க்க வேண்டிய கடற்றொழி்லாளர்களின் பிரச்சினைகளை விரைவில் தீர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளார் எனவும், எமது அரசாங்கம் வறுமை ஒழிப்பு, டிஜிற்றல் முறைமை மற்றும் கிளீன் ஸ்ரீலங்கா போன்ற விடயங்களில் அக்கறை செலுத்தி வருவதாகவும் தெரிவித்து, கடற்றொழி்லாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அனைவரும் எம்முடன் ஒன்றிணைந்து தீர்வு காண வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இக் கலந்துரையாடலில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி, உள்ளூர் மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள், மயிலிட்டி துறைமுக மூன்றாம் கட்ட அபிவிருத்தி போன்ற விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டது.

பிரதேச சபைகளின் கெளரவ தவிசாளர்கள், கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் மேலதிக செயலாளர், வடமாகாண மீன்பிடி அமைச்சின் செயலாளர், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பிரதேச செயலாளர்கள், கடலோரப் பாதுகாப்பு திணைக்களம், கடற்படை மற்றும் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் கடற்றொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள், இலங்கை கடற்றொழில் துறைமுக கூட்டுத்தாபனம், தேசிய நீரியல் வளங்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகாமை (NARA), இலங்கை தேசிய நீர் உயிரின வளர்ப்பு அதிகார சபை (NAQDA) ஆகியவற்றின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Related Posts

நீதியரசர் வெற்றிடங்களை உடனடியாக நிரப்புங்கள் – சபாநாயகரிடம் எதிர்க்கட்சிகள் கூட்டு மகஜர்!

நீதியரசர் வெற்றிடங்களை உடனடியாக நிரப்புங்கள் – சபாநாயகரிடம் எதிர்க்கட்சிகள் கூட்டு மகஜர்!

by selvan
June 12, 2026
0

உயர்நீதிமன்றத்தில் நீண்டகாலமாக நிலவி வரும் நீதியரசர்களின் வெற்றிடங்களை உடனடியாக நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட விசேட கடிதமொன்று இன்று சபாநாயகர் ஜகத்...

வலிகாமம் வடக்கில் இராணுவ கொமாண்டோ பங்களா முன் 8 ஆவது வாரமாகவும் போராட்டம் முன்னெடுப்பு!

வலிகாமம் வடக்கில் இராணுவ கொமாண்டோ பங்களா முன் 8 ஆவது வாரமாகவும் போராட்டம் முன்னெடுப்பு!

by selvan
June 12, 2026
0

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது சொந்தக் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமாண்டோ" பங்களா முன்பாக...

வருண ஜயசுந்தரவைக் கைது செய்யும் எண்ணம் இல்லை! – சட்டமா அதிபர் அறிவிப்பு

வருண ஜயசுந்தரவைக் கைது செய்யும் எண்ணம் இல்லை! – சட்டமா அதிபர் அறிவிப்பு

by selvan
June 12, 2026
0

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் வருண ஜயசுந்தரவைக் கைது செய்யவோ அல்லது தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தவோ எவ்வித...

நாவலப்பிட்டியவில் வீட்டின் மீது மரம் விழுந்ததில் நால்வர் காயம்!

நாவலப்பிட்டியவில் வீட்டின் மீது மரம் விழுந்ததில் நால்வர் காயம்!

by selvan
June 12, 2026
0

கண்டி நாவலப்பிட்டிய பிரதேசத்தில் வீசிய பலத்த காற்று மற்றும் கனமழை காரணமாக இம்புல்பிட்டிய உச்சியில் உள்ள வீடொன்றின் மீது பாரிய மரம் விழுந்ததில் நால்வர் காயமடைந்துள்ளனர். இன்று...

வர்த்தக நிலையத்தின் மீது முறிந்து வீழ்ந்த மரம்.!

வர்த்தக நிலையத்தின் மீது முறிந்து வீழ்ந்த மரம்.!

by Mathavi
June 12, 2026
0

கிளிநொச்சி மாவட்டத்தில் கடும் காற்று காரணமாக இன்று 12.06.2026 கிளிநொச்சி பரந்தன் பொதுச்சந்தையில் வர்த்தக நிலையம் ஒன்றின் மீது பாலை மரம் முறிந்து வீழ்ந்தமையால் வர்த்தக நிலையம்...

அநுர அரசால் நாடு வீழ்ச்சிப் பாதையில்.!

அநுர அரசால் நாடு வீழ்ச்சிப் பாதையில்.!

by Mathavi
June 12, 2026
0

தற்போதைய அரசின் செயற்திறனற்ற தன்மையினாலும், அனுபவமின்மையினாலும் நாடு மிக வேகமாக வீழ்ச்சியை நோக்கிப் பயணிக்கின்றது என்று முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். நாட்டின்...

கடந்த இரண்டரை ஆண்டுகளில் நீரில் மூழ்கி 1,093 பேர் உயிரிழப்பு.!

கடந்த இரண்டரை ஆண்டுகளில் நீரில் மூழ்கி 1,093 பேர் உயிரிழப்பு.!

by Mathavi
June 12, 2026
0

இலங்கையில் நடப்பு 2026ஆம் ஆண்டில் இதுவரையிலான காலப்பகுதியில் மாத்திரம் நீரில் மூழ்கியமையால் 122 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத்...

அரசு மீதான நம்பிக்கை முற்றிலும் பூஜ்ஜியம்; பொய்களாலேயே ஆட்சியை நடத்துகின்றனர்.!

அரசு மீதான நம்பிக்கை முற்றிலும் பூஜ்ஜியம்; பொய்களாலேயே ஆட்சியை நடத்துகின்றனர்.!

by Mathavi
June 12, 2026
0

அரசின் மீதான மக்களின் நம்பிக்கை முற்றிலும் இழக்கப்பட்டு, அவநம்பிக்கையே மேலோங்கியுள்ளது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டு...

சொல்லிசை பாடகர் சங்கீத்ஷன் பிணையில் விடுதலை.!

சொல்லிசை பாடகர் சங்கீத்ஷன் பிணையில் விடுதலை.!

by Mathavi
June 12, 2026
0

பாடகர் சங்கீத்ஷனுக்கு எதிராகப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை விலக்க சட்டமா அதிபர் தீர்மானித்துள்ளார் என்று பொலிஸார் இன்று சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்....

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது.!

ஐஸ் போதைப்பொருளுடன் அபிவிருத்தி உத்தியோகத்தர் கைது.!

by Mathavi
June 12, 2026
0

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆயுர்வேத வைத்தியசாலைக்கு முன்பாக, இன்று (12) காலை ஐஸ் போதைப்பொருளுடன் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் கிண்ணியா போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்....

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி