• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, May 21, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home அம்பாறை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் குழப்பம்.!

Mathavi by Mathavi
June 17, 2025
in அம்பாறை செய்திகள், இலங்கை செய்திகள்.
0
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் குழப்பம்.!
Share on FacebookShare on Twitter

தமிழர் விரோத செயல்களுக்கும் தமிழர் தேச ஆக்கிரமிப்புகளுக்கும் எதிரான மக்கள் போராட்டம் தமிழர்களாக உணர்வோடும் உரிமையோடும் அணி திரள்வோம் என்ற தொனிப்பொருளில் அம்பாறை மாவட்டம் திருக்கோவில் தம்பிலுவில் மத்திய சந்தை முன்பாக திங்கட்கிழமை(16) நடைபெற்ற போது பதற்ற நிலைமை ஏற்பட்டது.

இதன் போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தில் குழப்பம் ஏற்பட்டதுடன் திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளரால் சந்தை பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்த தடை என்ற விடயத்தினால் இப்பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

போராட்டம் நடைபெற்ற பகுதிக்கு தவிசாளரது பெயரை கூறி வருகை தந்த சிலர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மிரட்டியதுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

தமிழருக்காக குரல் கொடுப்பதற்கு வடகிழக்கில் எங்கும் செல்வேன். என்னை எவராலும் தடுக்க முடியாது என காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்து இருக்கின்றார்.

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளால் நடத்தப்பட்ட போராட்டத்தில் ஏற்பட்ட சிறு சலசலப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இன்று காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் நடத்தப்பட்ட போராட்டத்தில் மாத்திரமல்ல தமிழன் என்ற அடிப்படையில் வடகிழக்கு பூராகவும் எங்களது இனத்துக்காகவும் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கும் நீதி வேண்டி தற்போதும் இளைய சந்ததிகள் மற்றும் சமூகங்கள் எதிர்காலத்தில் கடத்தப்படக்கூடாது என்பதற்காகவும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு வருகின்றேன்.

இருந்தபோதிலும் திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் ஒரு துண்டுப்பிரசுரத்தை வெளியிட்டு திருக்கோவில் தம்பிலுவில் மத்திய சந்தை பகுதியில் போராட்டம் நடத்துவதற்கு தடை ஏற்படத்தியுள்ளார். ஆனால் அவ்வாறான செயற்பாடுகள் மனிதனுடைய அடிப்படை உரிமை மீறல் ஆகும். இவ்வாறான விடயங்களை தவிசாளர் என்பவர் செய்யக் கூடாது. அவ்வாறான அதிகாரம் தவிசாளருக்கு இல்லை என்பதை இவ்விடத்தில் கூறிக் கொள்ள விரும்புகின்றேன் .

அதாவது நானும் முன்னாள் தவிசாளர் என்ற முறையில் எனக்கு தெரிந்த விடயத்தில் இவ்விடயத்தை தெரிவிக்க விரும்புகின்றேன். ஏனெனில் எமது வடகிழக்கு தமிழர்களின் பாதுகாப்புக்காக இவ்வாறான போராட்டங்கள் நடந்து வருகின்றது. அதன் அடிப்படையில் போராட்டம் நடைபெற்ற போது சிலர் மதுபோதையில் தவிசாளரின் இணைப்பாளர் என கூறிக்கொண்டும் நீங்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட முடியாது. காரைதீவில் இருந்து நீங்கள் இவ்விடத்திற்கு வர முடியாது என்று கூறினார்.

நான் தமிழன் என்ற ரீதியில் எங்கு சென்றும் குரல் கொடுப்பேன் முடிந்தால் நான் இன்று மது போதையில் எங்களை எதிர்த்தவர்களுக்கு பொலிஸில் முறைப்பாடு செய்ய முடியும். கடந்த ஆட்சிக் காலத்தில் ஒட்டுக் குழுக்களின் பின்னணியிலிருந்து இந்த இடத்தில் பல தடவை நான் அச்சுறுத்தப்பட்டேன். ஒரு தடவை கடத்தப்படவும் இருந்தேன். பாதுகாப்பான முறையில் அந்த சந்தர்ப்பத்தில் இந்த திருக்கோவில் மக்கள் எனது வீட்டுக்கு பாதுகாப்பாக அழைத்துச் சென்று விட்டார்கள். அவ்வாறான சம்பவங்கள் கடந்த காலத்தில் இடம்பெற்றிருக்கின்றது. இனிய பாரதி என்பவர் ஆயுத குழுக்களுடன் இயங்குகின்ற போது கூட நான் இந்த மக்களுக்கு உயிரை துச்சமாக மதித்து போராடியவர். ஆனால் இன்று என்னை மது போதையில் வந்து தாக்க முற்பட்டு காரைதீவு பகுதியில் இருந்து திருக்கோவில் பகுதிக்கு எவ்வாறு வருவீர்கள் என்றும் உங்களுக்கு இடுப்பில் பலம் இருக்கின்றதா என்று என்னிடம் கேட்கின்றார்கள்.

மேலும் நிச்சயமாக எனது இடுப்பில் பலம் இருக்கின்றது . முத்தமிழ் வித்தகர் பிறந்த மண்ணில் பிறந்தவன் நான். எல்லா தமிழ் பிரதேசங்களுக்கும் தமிழன் என்ற அடிப்படையில் நான் போராட்டங்களிலும் தமிழர்களுடைய நலன்கள் மற்றும் கடந்தகால கொரோனா காலகட்டத்தில் திருக்கோவில் பிரதேசத்திற்கு பொத்துவில் பிரதேச செயலாளர் ஊடாக ஆலையடி வேம்பு பிரதேச செயலாளரின் ஊடாக கல்முனை பிரதேச செயலாளர் ஊடாகவும் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் ஊடாக பட்டினியில் வாழ்ந்த எமது உறவுகளுக்கு நிவாரண பணிகளை முன்னெடுத்து அந்த உதவியை எமது சகோதரர்கள் ஊடாக மேற்கொண்டு இருந்தேன் என குறிப்பிட்டார்.

இந்தப் போராட்டத்தின் போது செம்மணி மனிதப் புதைகுழி, உகந்தையில் புத்தர் சிலை நிர்மாணம், தமிழர் காஷி அபகரிப்புகள், தொல்லியல் ஆக்கிரமிப்புகள், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி, கொல்லப்பட்டோருக்கான நீதி, அரசியல் கைதிகள் விடுதலை, பயங்கரவாத தடை சட்டத்தை நிறுத்துதல் போன்றவற்றிற்கு நியாயம் கேட்கும் மக்கள் போராட்டமாக இப் போராட்டம் அமைந்திருந்தது.

இப் போராட்டத்தில் பொதுமக்கள், சிவில் அமைப்புகள், கழகங்கள், இளைஞர்கள் என பல தரப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

Related Posts

கட்டுப்பாடற்ற ரூபாய் வீழ்ச்சியால் மக்கள் மீது பாரிய சுமை.!

கட்டுப்பாடற்ற ரூபாய் வீழ்ச்சியால் மக்கள் மீது பாரிய சுமை.!

by Mathavi
May 21, 2026
0

தற்போதைய அரசின் முறையற்ற பொருளாதார முகாமைத்துவம் மற்றும் கட்டுப்பாடற்ற ரூபாய் வீழ்ச்சி காரணமாக, ஒட்டுமொத்த பொதுமக்களும் மிகக் கடுமையான வாழ்க்கைச் செலவு மற்றும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ள...

அரிசி இறக்குமதிக்கு கடும் எதிர்ப்பு வெளியிட்ட ரவிகரன் எம்.பி.!

அரிசி இறக்குமதிக்கு கடும் எதிர்ப்பு வெளியிட்ட ரவிகரன் எம்.பி.!

by Mathavi
May 21, 2026
0

நாட்டில் ஏற்பட்டுள்ள சம்பா மற்றும் கீரி சம்பா அரிசித் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்காக, பொன்னி சம்பா மற்றும் பால்பொன்னி உள்ளிட்ட GR11 அரிசி வர்க்கங்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி...

திலாப்பியா மீன் பதனிடும் நிலைய திறப்பு விழா.!

திலாப்பியா மீன் பதனிடும் நிலைய திறப்பு விழா.!

by Mathavi
May 21, 2026
0

நோர்வே மற்றும் அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் நிதியுதவியில் (ILO) சர்வதேச தொழிலாளர் அமைப்பினால் செயற்படுத்தப்பட்ட திலாப்பியா மீன் பதனிடும் நிலைய திறப்பு விழா இன்று இரணைமடு குளத்தில் நடைபெற்றது....

இலங்கை பெரும் ஆபத்தில்; சர்வதேச நாணய நிதியத்துடன் உடனே அடுத்த கட்ட பேச்சுகளை ஆரம்பியுங்கள்.!

இலங்கை பெரும் ஆபத்தில்; சர்வதேச நாணய நிதியத்துடன் உடனே அடுத்த கட்ட பேச்சுகளை ஆரம்பியுங்கள்.!

by Mathavi
May 21, 2026
0

இலங்கை தற்போது புதியதொரு பொருளாதார மரணப் பொறிக்குள் சிக்கி, நாடு பெரும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது என்று எச்சரித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, தற்போதைய திட்டம் முடிவடைவதற்கு...

குளத்தில் மீன்பிடிக்கச் சென்றவருக்கு நேர்ந்த கதி.!

குளத்தில் மீன்பிடிக்கச் சென்றவருக்கு நேர்ந்த கதி.!

by Mathavi
May 21, 2026
0

இரணைமடுக்குளத்தில் தூண்டில் மீன் பிடிப்பதற்காக சென்ற 65 வயதானவர் மீது யானை தாக்கியதில் படுகாயம் அடைந்துள்ளார். குறித்த சம்பவமானது இன்று காலை இடம்பெற்றுள்ளது. தூண்டிலில் மீன்பிடிப்பதற்காக சைக்கிளில்...

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு வீழ்ச்சி.!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு வீழ்ச்சி.!

by Mathavi
May 21, 2026
0

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மத்திய வங்கி இன்று உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ள நாணய மாற்று...

ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.!

ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.!

by Mathavi
May 21, 2026
0

இரத்தினபுரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெரளுகஹபிட்டிய பகுதியில் உள்ள களு கங்கையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று புதன்கிழமை (20) களு...

சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜிற்கு சபையில் அஞ்சலி செலுத்தினார் ரவிகரன் எம்.பி.!

சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜிற்கு சபையில் அஞ்சலி செலுத்தினார் ரவிகரன் எம்.பி.!

by Mathavi
May 21, 2026
0

விடுதலைப்புலிகள் அமைப்பின் மூத்த தளபதியும் சமர்க்கள நாயகனுமான பிரிகேடியர் பால்ராஜ் அவர்களுக்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார். நாடாளுமன்றில் இன்று...

மாற்றுத்திறனாளிகள் விடயத்தில் அரச செயற்பாடுகள், அமுல்படுத்தல்கள் திருப்தியாக இல்லை.!

மாற்றுத்திறனாளிகள் விடயத்தில் அரச செயற்பாடுகள், அமுல்படுத்தல்கள் திருப்தியாக இல்லை.!

by Mathavi
May 21, 2026
0

மாற்றுத் திறனாளிகளை பாதுகாப்பதற்கான சட்டங்கள், ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சமவாயங்களில் அரசு கையெழுத்திட்டுள்ள போதும் நடைமுறைப்படுத்தல்கள் திருப்தி தருவதாக இல்லை என வலிகாமம் கிழக்கு பிரதேச...

பொலிஸ் பரிசோதகர் சுட்டுக் கொ*லை; உந்துருளி ஓட்டுநர் கைது.!

போலி அமெரிக்க டொலர் நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது.!

by Mathavi
May 21, 2026
0

கொழும்பு, வெள்ளவத்தையில் போலி அமெரிக்க டொலர் நாணயத்தாள்களுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட 43 வயதுடைய சந்தேகநபர் தலவாக்கலை பகுதியைச் சேர்ந்தவர்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி