நடந்து முடிந்த சிவனடி பாத மலை பருவகாலம் 2024/2025 ல் இந்த 6 மாத காலத்தில் நல்லதண்ணி சிவனடிபாத மலைக்கு செல்லும் வீதியில் சிவனடிபாத மலைக்கு தரிசனம் செய்ய வந்த யாத்திரியர்களினால் சிவனடி பாத மலையை அன்டிய வன பகுதியிலும் வீதியிலும் கழிவுகள் 241 டொன் விட்டு சென்று உள்ளனர் என்று மஸ்கெலியா பிரதேச சபையின் செயலாளர் சிவராஜ் ராஜவீரன் தெரிவித்தார்.
2024 டிசம்பர் மாதம் முதல் 2025 மெய் மாதம் வரை உள்ள 6 மாத காலத்தில் இம் முறை இடம் பெற்ற பருவத்தில் உக்கும் பொருட்கள் 178 டொன்னும், உக்காத பொருட்கள் 63 டொன்னும் விட்டு சென்றுள்ளதாகவும் இதில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் போத்தல்கள் 3 அடங்கும் என செயலாளர் எஸ்.ராஜவீரன் கூறினார்.
கடந்த காலங்களை விட இந்த ஆண்டு யாத்திரிகர்கள் சுற்றுச்சூழலுக்கு அதிக அளவில் குப்பைகளை விட்டு சென்றுள்ளனர் என்றும் மேலும் மஸ்கெலியா பிரதேச சபையின் செயலாளர் சிவராஜ் ராஜவீரன் கூறுகையில் எவ்வளவு தெளிவுபடுத்தினாலும் உள்நாட்டு யாத்திரிகர்கள் கழிவுப் பொருட்களை விட்டு செல்வது அதிகம்.
இந்த கழிவுகள் அனைத்தும் மஸ்கெலியா பிரதேச சபைக்கு சொந்தமான ரிக்காடன் கிராமத்தில் உள்ள கழிவுகள் சேகரிக்கும் மையத்திற்கு கொண்டு வரப்பட்டு அங்கு உக்கும் பொருட்கள் அனைத்தும் உரமாக்கும் நடவடிக்கைக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் தனியாக பிரித்து எடுக்கப்பட்டது என செயலாளர் எஸ்.ராஜவீரன் தெரிவித்தார்.










