மாத்தளையில் கலேவெல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பேருந்து தரிப்பிடத்திற்கு அருகில் இருந்து நேற்று செவ்வாய்க்கிழமை (10) ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கலேவெல பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் சியம்பலாகஹவெல பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடையவர் ஆவார்.
சடலமானது தம்புள்ளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கலேவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ADVERTISEMENT