A9 பிரதான வீதியின் முகமாலைப்பகுதியில் விபத்து குறித்த விபத்தானது இன்று பிற்பகல் 3.30மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கிச்சென்ற இலங்கை போக்குவரத்துச்சபை பேரூந்தும் கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் மோதிய நிலையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயம் அடைந்த நிலையில் பளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ADVERTISEMENT