யாழ் தமிழ் நிதியம் மற்றும் உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி இணைந்து நடாத்திய இரத்ததான முகாம் இன்று காலை 8:30 மணியிலிருந்து பிற்பகல் 1:30 மணிவரை உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியில் பாடசாலை அதிபர் தலமையில் இடம் பெற்றது.
இதில் குருதிக் கொடையை பெற்றுக் கொள்வதற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை குருதி வங்கி பிரிவினர் வருகை தந்திருந்தனர்.
இதில் உடுப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த 15 இற்கும் மேற்பட்டோர் குருதிக் கொடையளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ADVERTISEMENT