வரலாற்று சிறப்புமிக்க வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலய பிரதான வீதிக்கு காப்பற் இடும் பணியினை இன்றைய தினம் (02) வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரனால் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது.
போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் வழிகாட்டுதலின் அடிப்படையில் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் கீழ் 24 மில்லியன் ரூபா செலவில் 1.75 கிலோ மீற்றர் காப்பற் வீதியும், மீதமாக உள்ள 4.35 கிலோமீற்றர் வீதிக்கு கிரவலும் போடப்படவுள்ளது.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் உயர் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், பிரதேச மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
ADVERTISEMENT


