அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் உலகின் முன்னணி கல்வி நிறுவனமான ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் சேர தடை உத்தரவானது பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வன்முறை, யூத எதிர்ப்பு, சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்புடைய நபர்களை பல்கலை. வளாகத்தில் ஒருங்கிணைப்பது ஆகியவற்றுக்கு நிர்வாகமே பொறுப்பு என அந்நாட்டின் உள்துறை செயலாளர் கருத்து தெரிவித்துள்ளார்.
டிரம்பின் இந்த முடிவுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ட்ரம்ப் அரசின் இந்த நடவடிக்கை பல்கலைக்கழகத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும் எனவும், இது ஒரு பழிவாங்கும் நடவடிக்கை என்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
அரசின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது. 140க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் வல்லுநர்களை உருவாக்கும் ஹார்வர்டின் திறனைப் பராமரிப்பதில் நாங்கள் முழு உறுதியுடன் இருக்கிறோம்.
மேலும் அவர்கள் பல்கலைக்கழகத்தையும், இந்த நாட்டையும் அளவிட முடியாத அளவுக்கு மேம்படுத்துவார்கள்” என்று பல்கலைக்கழகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.