பாகிஸ்தானுடன் வர்த்தகமும் இல்லை பேச்சுவார்த்தையும் இல்லை என இந்திய பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மோடி பேசியதாவது:
பாகிஸ்தானுக்கு நாம் பதிலடி கொடுத்து இருக்கிறோம். பாகிஸ்தானுடன் வர்த்தகமும் இல்லை. பேச்சுவார்த்தையும் இல்லை. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து மட்டும் பேச்சுவார்த்தை இருக்கும். இந்தியாவுக்கு எதிரான நேரடி போரில் பாகிஸ்தானால் ஒரு போதும் வெற்றி பெற முடியாது. இந்தியாவுக்கு சொந்தமான தண்ணீரை பாகிஸ்தானால் பெறமுடியாது.
பாகிஸ்தானின் 9 தீவிரவாத முகாம்களை வெறும் 22 நிமிடத்தில் அழித்து இருக்கிறோம். நமது முப்படைகளின் சக்கரவியூகத்தால் பாகிஸ்தான் மண்டியிட்டுள்ளது. இந்தியர்களின் இரத்தத்துடன் விளையாடுவதற்கு பாகிஸ்தான் பெரும் விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும். ஒவ்வொரு தீவிரவாதத் தாக்குதலுக்கும் இந்திய பாதுகாப்பு படையினர் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்பதை நிரூபித்துள்ளோம்.