இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவின் திட்டம் தொடர்பிலும், காஸாவுக்குள் கடந்த 11 வாரங்களாக உணவு மற்றும் உதவிப்பொருட்கள் செல்ல விடாமல் செய்ததற்கும் கடும் கண்டனம் தெரிவித்து கனடா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகள் நேற்று (20) கூட்டாக அறிக்கை வெளியிட்டிருந்தன.
இந்நிலையில், காஸா மீதான தாக்குதலுக்கு எதிராக பிற நாடுகளில் இருந்து வரும் புற அழுத்தத்திற்கு தங்கள் நாடு ஒருபோதும் அடிபணியாது என இஸ்ரேல் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
மேலும், இஸ்ரேலுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையை இரத்து செய்வதாக இங்கிலாந்து அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
ADVERTISEMENT