தனியார் பேருந்து முச்சக்கர வண்டி நேருக்கு நேர் மோதல் ஒருவர் பலி மூவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரியவருகின்றன.
இச் சம்பவம் இன்று மாலை 7 மணிக்கு டிக்கோயா பகுதியில் இடம் பெற்று உள்ளது என ஹட்டன் பொலிசார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் நால்வர் காயமடைந்த நிலையில் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல பட்டு சிகிச்சை பெற்று வந்த வேலையில் ஒருவர் மரணம் அடைந்தார் என்றும் ஏனைய மூன்று பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என ஹட்டன் பொலிசார் தெரிவித்தனர்.
மஸ்கெலியா பகுதில் இருந்து ஹட்டன் நோக்கி சென்ற தனியார் பேருந்தும் ஹட்டன் பகுதியில் இருந்து டிக்கோயா பகுதிக்கு வந்த முச்சக்கர வண்டி மோதி கொண்டதில் இந்த அனர்த்தம் ஏற்பட்டு உள்ளது என போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.




