1832
இலங்கையில் கட்டாய அரச சேவையை ஒழிக்கும் ஆணையை பிரித்தானிய அரசர் பிறப்பித்தார்.
1831
இங்கிலாந்தில் மான்செஸ்டர் நகரில் பிரஃப்டன் தொங்கு பாலத்தில் போர் வீரர்கள் அணிவகுத்து சென்றதில் பாலம் உடைந்தது.
1861
அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்புப் படைகள் ஐக்கிய அமெரிக்காவின் படைகளை தென் கரோலினாவில் தாக்கியதுடன் போர் வெடித்தது.
1864
அமெரிக்க உள்நாட்டுப் போர்: டென்னிசியில் சரணடைந்த அனைத்து ஆப்பிரிக்க-அமெரிக்கப் படையினரும் கூட்டமைப்புப் படைகளினால் படுகொலை செய்யப்பட்டனர்.
1865
அமெரிக்க உள்நாட்டுப் போர்: அலபாமாவில் மொபைல் என்ற நகரம் கூட்டமைப்பு இராணுவத்திடம் வீழ்ந்தது.
1877
ஐக்கிய இராச்சியம் திரான்சுவால் மாநிலத்தை தென்னாப்பிரிக்காவுடன் இணைத்தது.
1927
சாங்காயில் சங் கை செக் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களுக்கு மரண தண்டனையை அறிவித்தார்.
1927
அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் ரொக்சுஸ்பிரிங்சு என்ற இடத்தில் சூறாவளி தாக்கியதில் நகரின் கட்டடங்கள் அனைத்தும் சேதமடைந்தன. 72 பேர் உயிரிழந்தனர்.
1937
சேர் பிராங்க் விட்டில் வானூர்தி ஒன்றை பறக்கவிடுவதற்கான முதலாவது தாரைப் பொறியை இங்கிலாந்து, ரக்பி நகரத்தில் சோதித்தார்.
1945
அமெரிக்க அரசுத்தலைவர் பிராங்க்ளின் ரூசவெல்ட் காலமாகியதைத் தொடர்ந்து துணைத்தலைவர் ஹாரி எஸ். ட்ரூமன் அரசுத்தலைவரானார்.
1955
யோனாசு சால்க் கண்டுபிடித்த போலியோ தடுப்பூசி பாதுகாப்பானதென அறிவிக்கப்பட்டது.
1961
பனிப்போர்: விண்வெளிப் போட்டி: சோவியத் விண்ணோடி யூரி ககாரின் விண்வெளிக்கு சென்ற முதல் மனிதர் என்ற பெருமையைப் பெற்றார்.
1963
சோவியத் அணுசக்தி-நீர்மூழ்கிக் கப்பல் கே-33 பின்லாந்து சரக்குக் கப்பல் ஒன்றுடன் மோதியது.
1970
சோவியத் நீர்மூழ்கி கே-8 பிஸ்கே விரிகுடாவில் விபத்துக்குள்ளாகி மூழ்கியது.
1980
பிரேசிலில் போயிங் 727 வானூர்தி ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த 58 பேரில் 55 பேர் உயிரிழந்தனர்.
1980
லைபீரியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து சாமுவேல் டோ நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றினார். 130 ஆண்டுகால மக்களாட்சி அமைப்பு முறை முடிவுக்கு வந்தது.
1981
முதலாவது விண்ணோடம் கொலம்பியாவில் ஏவப்பட்டது.
1983
பிரித்தானியத் திரைப்படமான காந்தி எட்டு ஒஸ்கார் விருதுகளை வென்றது.
2002
எருசலேம் சந்தை ஒன்றில் பெண் ஒருவர் தற்கொலைத் தாக்குதல் நடத்தியதில் 7 பேர் கொல்லப்பட்டனர், 104 பேர் காயமடைந்தனர்.
2007
இந்தியா அக்னி-III என்ற தரையில் இருந்து தரைக்கு ஏவப்படும் நடுத்தர ஏவுகணையை 3000 கிமீ தூரத்துக்கு வெற்றிகரமாகப் பரிசோதித்தது.
2009
சிம்பாப்வே தனது டாலர் நாணயத்தை அதிகாரபூர்வமாகக் கைவிட்டது.
2014
சிலியின் வல்பெய்ரசோவ் நகரில் தீ பரவியதில் 16 பேர் உயிரிழந்தனர், 2,000 வீடுகள் அழிந்தன, 10,000 பேர் இடம்பெயர்ந்தனர்.





