• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, June 30, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home வரலாற்றில் இன்று

இலங்கை மற்றும் உலகில் இடம்பெற்ற வரலாற்றுச் சம்பவங்கள்.!

Mathavi by Mathavi
April 18, 2025
in வரலாற்றில் இன்று
0
இலங்கை மற்றும் உலகில் இடம்பெற்ற வரலாற்றுச் சம்பவங்கள்.!
Share on FacebookShare on Twitter

1958 – இலங்கையில் பண்டாரநாயக்க – செல்வநாயகம் ஒப்பந்தம் முறிவடைந்தது.

இலங்கைப் பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்களுக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தமே பண்டா – செல்வா ஒப்பந்தமாகும்.

தனிச் சிங்களச் சட்டம், இந்தியத் தமிழ் தோட்டத் தொழிலாளர் குடியுரிமை பறிப்பு, தமிழ்ப் பிரதேசங்களில் அத்துமீறிய குடியேற்றங்களினால் ஆத்திரமடைந்து பல்வேறு வகையான போராட்டங்களில் ஈடுபட்ட தமிழர்களை ஓரளவுக்கு சமாதானப்படுத்தும் நோக்குடன் இந்த ஒப்பந்தம் பண்டாரநாயக்காவால் கைச்சாத்திடப்பட்டது.

குடியேற்றத் திட்டங்களைப் பொறுத்தவரை, பிரதேச சபைகளுக்குத் தரப்படும் அதிகாரங்களுள், அப்பிரதேசத்துள் குடியேற்றப்படுபவரை தெரிவு செய்வதும் அங்கு வேலைக்கு ஆட்களை நியமிக்கும் பொறுப்பும் அடங்கும் என்பதில் இவ்வொப்பந்தத்தில் உடன்பாடு ஏற்பட்டது.

ஒப்பந்த முறிவு
இவ்வொப்பந்தத்தை எதிர்த்து ஒக்டோபர் 4, 1957 இல் ஜே. ஆர். ஜெயவர்த்தனா உட்பட பல சிங்களத் தலைவர்கள் பலரும் கண்டிக்கு நடத்திய எதிர்ப்பு யாத்திரை காரணமாகவும் பௌத்த பிக்குகள் பலரும் தீவிரமாக எதிர்த்தமையாலும் இவ்வொப்பந்தம் நடைமுறைப் படுத்தப்படவில்லை.

1835
அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ண் நகரம் அமைக்கப்பட்டது.

1864
புருசிய – ஆஸ்திரிய கூட்டு இராணுவத்தினர் டென்மார்க்கைத் தோற்கடித்து சிலெசுவிக் மாகாணத்தைக் கைப்பற்றினர். அதன் பின்னர் ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்தை அடுத்து டென்மார்க் இம்மாகாணத்தை இழந்தது.

1880
மிசூரியில் வீசிய புயல் காற்றினால் 99 பேர் உயிரிழந்தனர்.

1897
கிரேக்கத்திற்கும் உதுமானியப் பேரரசுக்கும் இடையே போர் மூண்டது.

1902
குவாத்தமாலாவில் 7.5 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 800–2,000 பேர் வரை உயிரிழந்தனர்.

1906
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் நகரில் 3,000 பேர் வரையில் உயிரிழந்தனர். நகரம் தீப்பிடித்தில் பெரும் சேதம் ஏற்பட்டது.

1909
ஜோன் ஆஃப் ஆர்க் திருத்தந்தை பத்தாம் பயசினால் புனிதப்படுத்தப்பட்டார்.

1912
கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலில் உயிர் பிழைத்த 705 பேர் நியூ யோர்க் வந்து சேர்ந்தனர்.

1930
பிபிசி வானொலி தனது வழமையான மாலைச் செய்தி அறிக்கையில் இந்நாளில் எந்த செய்திகளும் இல்லை என அறிவித்தது.

1942
இரண்டாம் உலகப் போர்: ஜப்பானின் டோக்கியோ, யோக்கோகாமா, கோபே, நகோயா ஆகிய நகரங்கள் மீது அமெரிக்கப் போர் விமானங்கள் குண்டுத் தாக்குதலை மேற்கொண்டன.

1945
இரண்டாம் உலகப் போர் : ஜேர்மனியின் எலிகோலாந்து என்ற சிறு தீவின் மீது ஆயிரத்துக்கும் மேற்பட்ட போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின.

1946
அனைத்துலக நீதிமன்றம் முதல் தடவையாக நெதர்லாந்தின் டென் ஹாக் நகரில் கூடியது.

1949
அயர்லாந்து குடியரசு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

1954
ஜமால் அப்துல் நாசிர் எகிப்தின் ஆட்சியைக் கைப்பற்றினார்.

1955
29 நாடுகள் பங்குபற்றிய முதலாவது ஆசிய – ஆப்பிரிக்க மாநாடு இந்தோனேசியாவின் பண்டுங் நகரில் ஆரம்பமானது.

1980
சிம்பாப்வே குடியரசு (முன்னாள் ரொடீசியா) அமைக்கப்பட்டது. கனான் பனானா அதன் முதல் குடியரசுத் தலைவரானார். ராபர்ட் முகாபே பிரதமரானார்.

1983
லெபனானில் பெய்ரூட் நகரில் அமெரிக்க தூதரகத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 63 பேர் கொல்லப்பட்டனர்.

1993
பாகிஸ்தான் அரசுத்தலைவர் குலாம் இசாக் கான் நாடாளுமன்றம் மற்றும் அமைச்சரவையைக் கலைத்தார்.

1996
லெபனானில் ஐ.நா கட்டிடம் ஒன்றின் மீது இஸ்ரேல் எறிகணைத் தாக்குதல் நடத்தியதில் 106 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

2007
பகுதாது நகரில் பரவலான தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதில் 198 பேர் கொல்லப்பட்டனர், 250 பேர் காயமடைந்தனர்.

2018
சுவாசிலாந்தின் மன்னர் மூன்றாம் முசுவாத்தி நாட்டின் பெயர் இனிமேல் எசுவாத்தினி என அழைக்கப்படும் என அறிவித்தார்.

2021
கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக உலக அளவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 3 மில்லியன்களைத் தாண்டியது.

Related Posts

தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல் கொள்கைக்கெதிரான செயற்பாட்டாளர் கொ*லை; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல் கொள்கைக்கெதிரான செயற்பாட்டாளர் கொ*லை; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

by Mathavi
September 12, 2025
0

1814பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: வடக்கு முனை சமரில் அமெரிக்கப் படைகள் பிரித்தானியரின் பால்ட்டிமோர் நோக்கிய முன்னெடுப்பைத் தடுத்தன. 1848சுவிட்சர்லாந்து கூட்டமைப்பு ஆட்சியை நடைமுறைப்படுத்தியது. 1857மத்திய அமெரிக்கா...

யாழில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் பொன்.சிவபாலன், சுசாந்த மெண்டிஸ் பலி; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

யாழில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் பொன்.சிவபாலன், சுசாந்த மெண்டிஸ் பலி; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

by Mathavi
September 11, 2025
0

1889யாழ்ப்பாணத்தில் இந்து சாதனம் என்ற பத்திரிகை டி. பி. செல்லப்பாபிள்ளை என்பவரால் வெளியிடப்பட்டது. 1998யாழ் மாநகர சபையில் இடம்பெற்ற கிளைமோர் குண்டுவெடிப்பில் யாழ்ப்பாண முதல்வர் பொன். சிவபாலன்...

முகமாலை முன்னரங்கப் பகுதியில் இடம்பெற்ற மோதலில் 28 இராணுவத்தினர் கொ*லை; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

முகமாலை முன்னரங்கப் பகுதியில் இடம்பெற்ற மோதலில் 28 இராணுவத்தினர் கொ*லை; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

by Mathavi
September 10, 2025
0

1817பெரும் கிளர்ச்சி: இலங்கையில் வெல்லசை என்ற இடத்தில் கண்டி கிளர்ச்சி ஆரம்பமானது. 2000இலங்கை, மட்டக்களப்பு நகர முன்னாள் முதல்வர் செழியன் பேரின்பநாயகம் படுகொலை செய்யப்பட்டார். 2006முகமாலை முன்னரங்கப்...

சத்துருக்கொண்டான் பகுதியில் இராணுவத்தினரால் 184 பேர் கொ*ல்லப்பட்டனர்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்!

சத்துருக்கொண்டான் பகுதியில் இராணுவத்தினரால் 184 பேர் கொ*ல்லப்பட்டனர்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்!

by admin
September 9, 2025
0

1990சத்துருக்கொண்டான் படுகொலை: மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பகுதியில் 5 கைக்குழந்தைகள், 42 பத்து வயதுக்கு குறைவான சிறுவர்கள், 85 பெண்கள், 28 முதியவர்கள் உட்பட 184 தமிழர்கள் இலங்கை...

இந்தியாவில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 40 பேர் கொ*ல்லப்பட்டனர்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

இந்தியாவில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 40 பேர் கொ*ல்லப்பட்டனர்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

by Mathavi
September 8, 2025
0

1775மால்ட்டாவில் மதகுருக்களின் கிளர்ச்சி அடக்கப்பட்டது. 1796பிரெஞ்சுப் படையினர் ஆஸ்திரியப் படைகளைத் பசானோ சமரில் தோற்கடித்தனர். 1831நான்காம் வில்லியம் பெரிய பிரித்தானியாவின் மன்னராக முடிசூடினார். 1860லேடி எல்ஜின் என்ற...

செம்மணியில் இராணுவத்தினரால் கொல்லப்பட்ட தமிழர்களின் புதைகுழி விபரம் தெரியவந்தது; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்!

செம்மணியில் இராணுவத்தினரால் கொல்லப்பட்ட தமிழர்களின் புதைகுழி விபரம் தெரியவந்தது; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்!

by admin
September 7, 2025
0

1978கொழும்பு இரத்மலானை விமான நிலையத்தில் அவ்ரோ விமானம் ஒன்று குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது. 1999இலங்கை இராணுவத்தினரால் யாழ்ப்பாணம் செம்மணியில் கொல்லப்பட்ட 600 இற்கும் மேற்பட்ட தமிழர்களின் புதைகுழி...

கோட்டை முற்றுகையின் போது குண்டுவீச்சு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

கோட்டை முற்றுகையின் போது குண்டுவீச்சு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

by Mathavi
September 6, 2025
0

1873இலங்கையில் புதிதாக வடமத்திய மாகாணம் அமைக்கப்பட்டு, மொத்தம் இலங்கையின் மாகாணங்கள் ஏழாக அதிகரிக்கப்பட்டது. ஜே. இ. டிக்சன் அதன் முதலாவது அரச அதிபர் ஆனார். 1946இலங்கையில் ஐக்கிய...

கிழக்குப் பல்கலைக்கழக படு கொ*லைகள்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

கிழக்குப் பல்கலைக்கழக படு கொ*லைகள்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

by Mathavi
September 5, 2025
0

1803இலங்கையில் முதலாவது கண்டிப் போர்க் காலத்தில், அங்வெல்லையில் பிரித்தானியப் படைகளினால் கண்டி மன்னன் விக்கிரம ராஜசிங்கனின் படைகள் தோற்கடிக்கப்பட்டன. 1902இலங்கையில் சாவகச்சேரிக்கும் பளைக்கும் இடையில் 14 மைல்...

லாரி பேஜ், சேர்ஜி பிரின் ஆகிய மாணவர்கள் கூகுள் நிறுவனத்தை ஆரம்பித்தனர்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

லாரி பேஜ், சேர்ஜி பிரின் ஆகிய மாணவர்கள் கூகுள் நிறுவனத்தை ஆரம்பித்தனர்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

by Mathavi
September 4, 2025
0

1800மால்ட்டா தலைநகர் வல்லெட்டாவில் பிரெஞ்சுப் படைகள் பிரித்தானியரிடம் சரணடைந்தன. கோசோ மால்ட்டாவின் ஒரு பகுதியாக வந்தது. 1812பிரித்தானிய அமெரிக்கப் போர் - அரிசன் கோட்டை முற்றுகையின் போது...

தமிழ் மொழி சிறப்பு அமுலாக்க சட்டமூலம் இலங்கையின் மேலவையில் ஏற்பு; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

தமிழ் மொழி சிறப்பு அமுலாக்க சட்டமூலம் இலங்கையின் மேலவையில் ஏற்பு; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

by Mathavi
September 3, 2025
0

1759இலங்கை டச்சு அரசு புதிய ஏற்பாட்டைத் தமிழில் வெளியிட்டது. 1958தமிழ் மொழி சிறப்பு அமுலாக்க சட்டமூலம் இலங்கையின் மேலவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1189முதலாம் ரிச்சார்ட் இங்கிலாந்தின் மன்னராக வெஸ்ட்மின்ஸ்டரில்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி