1885
இலங்கையில் அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்ட முறை அறிமுகமானது.
1818
கனடாவுடனான எல்லை குறித்த உடன்பாட்டை அமெரிக்க மேலவை ஏற்றுக் கொண்டது.
1853
இந்தியாவின் முதலாவது பயணிகள் தொடருந்து சேவையை கிரேட் இந்தியன் பெனின்சுலார் ரயில்வே மும்பையில் போரி பந்தருக்கும் தானேக்கும் இடையில் ஆரம்பித்தது.
1862
அமெரிக்க உள்நாட்டுப் போர்: அடிமை முறையை ஒழிக்கும் சட்டம் வாசிங்டன், டி. சி.யில் அமுலுக்கு வந்தது.
1876
பல்கேரியாவில் உதுமானியப் பேரரசுக்கெதிராக புரட்சி வெடித்தது.
1912
அரியெட் குயிம்பி என்னும் பெண் ஆங்கிலக் கால்வாயை வானூர்தியில் கடந்த முதல் பெண்ணாக சாதனை படைத்தார்.
1917
நாடு கடந்த நிலையில் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்து வந்த விளாதிமிர் லெனின் ரஷ்யா, பெத்ரோகிராத் திரும்பினார்.
1919
போலந்து – சோவியத் போர்: போலந்து இராணுவம் வில்னியசு நகரை (இன்றைய லித்துவேனியாவில்) கைப்பற்ற வில்னா போர் நடவடிக்கையை ஆரம்பித்தது.
1919
அம்ரித்சர் படுகொலையைக் கண்டித்து மகாத்மா காந்தி ஒரு நாள் உண்ணாநோன்பு இருந்தார்.
1925
பல்கேரியா தலைநகர் சோஃபியாவில் சென் நெடெலியா ஆலயத்தில் கம்யூனிஸ்டுகள் தாக்கியதில் 150 பேர் கொல்லப்பட்டு 500 பேர் படுகாயமடைந்தனர்.
1941
இரண்டாம் உலகப் போர்: படை நடவடிக்கை 25 ஆரம்பித்ததை அடுத்து, குரோவாசியாவின் ஆட்சியை நாட்சி ஆதரவு “உசுத்தாசே என்ற அமைப்பிடம் அச்சு நாடுகள் ஒப்படைத்தது.
1943
ஆல்பர்ட் ஹாப்மன் தற்செயலாக லைசெர்ஜிக் ஆசிட் டைதைலமைடு மருந்தில் இல்பொருள்தோற்ற விளைவைக் கண்டுபிடித்தார்.
1944
இரண்டாம் உலகப் போர்: கூட்டுப் படையினர் பெல்கிரேட் மீது தாக்குதலைத் தொடுத்தனர். 1,100 பேர் கொல்லப்பட்டனர்.
1945
இரண்டாம் உலகப் போர்: சோவியத் செஞ்சேனை ஜேர்மனியப் படைகளுக்கெதிரான தமது கடைசிப் போரை பெர்லினைச் சுற்றி ஆரம்பித்தனர்.
1945
இரண்டாம் உலகப் போர்: அகதிகளை ஏற்றிச் சென்ற கோயா என்ற ஜேர்மனியின் கப்பல் ஒன்று சோவியத் நீர்மூழ்கியால் தாக்கப்பட்டு மூழ்கியதில் 7,000 பேர் கொல்லப்பட்டனர்.
1947
அமெரிக்காவின் டெக்சாஸ் துறைமுகத்தில் சரக்குக் கப்பல் ஒன்று வெடித்ததில் டெக்சாஸ் நகரம் தீப்பிடித்தது. 600 பேர் இதில் உயிரிழந்தனர்.
1947
சோவியத்- ஐக்கிய அமெரிக்கா இடையேயான உறவுகளை பனிப்போர் என அமெரிக்க பொருளாதார ஆலோசகர் பெர்னார்ட் பாருக் என்பவர் முதன் முதலாக வர்ணித்தார்.
1961
கியூபா தலைவர் பிடல் காஸ்ட்ரோ தான் ஒரு மார்க்சிய-லெனினியவாதி என்றும், கியூபா பொதுவுடைமை நாடு எனவும் அறிவித்தார்.
1966
முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூரில் ஆரம்பமானது.
1972
நாசாவின் அப்போலோ 16 விண்ணுக்கு ஏவப்பட்டது.
1992
மொசாம்பிக், மபூட்டோவில் கத்தீனா பி என்ற சரக்குக் கப்பல் மூழ்கியதில் 60,000 தொன் பாறை எண்ணெய் கடலில் கரைந்தது.
2007
ஐக்கிய அமெரிக்காவின் வேர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் கொரிய மாணவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழகப் பேராசிரியர் லோகநாதன் உட்பட 33 பேர் கொல்லப்பட்டு 29 பேர் காயமடைந்தனர்.
2013
ஈரான், சீசுத்தான் பலுச்சித்தா மாகாணத்தில் 7.8 அளவு நிலநடுக்கம் தாக்கியதில் 35 பேர் உயிரிழந்தனர், 117 பேர் காயமடைந்தனர்.
2014
தென் கொரிய பயணிகள் கப்பல் செவோல் ஜின்டோ தீவில் மூழ்கியதில் 304 பேர் உயிரிழந்தனர்.




