தேவேந்திரமுனை விகாரைக்கு அருகில் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் உட்பட 03 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நேற்று (21) இரவு 11.45 மணியளவில் தேவேந்திரமுனை ஸ்ரீ விஷ்ணு ஆலயத்திற்கு முன்பாக சின்ஹாசன வீதிக்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
இனந்தெரியாத ஆயுததாரிகள் T-56 மற்றும் இரண்டு 9mm துப்பாக்கிகளுடன் இரு இளைஞர்களை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த இரு இளைஞர்கள், தேவேந்திரமுனை கபுகம்புர பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தனது நண்பரின் பிறந்தநாள் விழாவை நடத்தியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட இடத்தில் 39 T-56 தோட்டாக்கள், 02 உயிருள்ள தோட்டாக்கள், 02 9mm தோட்டாக்கள் உறைகள் மற்றும் 02 உயிருள்ள தோட்டாக்கள் என்பன பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களிடமிருந்து வந்ததாகச் சந்தேகிக்கப்படும் எவ்ரி ரக வேன் ஒன்று, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட இடத்திலிருந்து 800 மீற்றர் தொலைவில் உள்ள ஒரு பக்க வீதியில் தீ வைத்து எரிக்கப்பட்டதாகவும், அதில் T-56 துப்பாக்கிக்கான மெகசீன் மற்றும் மற்றுமொரு T-56 தோட்டா உறைகள் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.