கல்முனை தாருல் குர்ஆன் மத்ரஸாவில் இருந்து சுமார் 29 மாணவ, மாணவிகள் முழுக் குர்ஆனையும் தஜ்வித் சட்டங்களோடு கற்று தமாம் செய்து வெளியாகியுள்ளனர். இம்மாணவர்களை பாராட்டி, நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு
தாருல் குர்ஆன் மத்ரஸாவின் அதிபர், கல்முனை ஹுதா ஜும்ஆ பள்ளிவாசல் பேஷ் இமாம் மௌலவி ஜே.எம்.சாபித் (ஷரயி,றியாதி) தலைமையில் அன்மையில் கல்முனை ஹுதா ஜூம்ஆ பள்ளிவாசலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கெளரவ அதிதிகளாக மெளலவி அஷ்-ஷெய்க் ஏ.சி.தஸ்தீக் (மதனி), மக்கா உம்முல் குரா பல்கலைக்கழக ஹதீஸ்துறை Phd மெளலவி எம்.எம்.எம்.பஷீர் (மக்கி) மற்றும் மெளலவி ஏ.எம். ஸாமில் உட்பட உலமாக்கள், முஅல்லிமாக்கள் பள்ளிவாசல்களின் நிர்வாகத்தினர், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
கடந்த நான்கு வருடங்களாக மிகச் சிறப்பாக இயங்கிவரும் குறித்த கல்முனை தாருல் குர்ஆன் மத்ரஸாவில் சகல பிள்ளைகளும் அல்குர்ஆனை சிறந்த முறையில் கற்றுக்கொண்டிருக்கின்றார்கள்.
குறித்த நான்கு வருட காலங்களுக்கும் தாருல் குர்ஆன் மத்ரஸாவில் இருந்து சுமார் 29 மாணவ, மாணவிகள் முழுக்
குர்ஆனையும் தஜ்வித் சட்டங்களோடு கற்று தமாம் செய்து வெளியாகிய நிலையில் அவர்களுக்கான பாராட்டு கெளரவத்தினை கண்ணியமிக்க உலமாக்கள் வழங்கி கெளரவித்தார்கள்.
இங்கு மத்ரஸாவின் அதிபர் மௌலவி ஜே.எம்.சாபித் (ஷரயி,றியாதி) அவர்களுக்கு மாணவன் நஸ்மல் அஹமட் இன் பெற்றார் சார்பாக பாராட்டி நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டது.


