கொழும்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று (30) பிற்பகல் பெய்த கனமழையால் ஏற்பட்ட பேரழிவில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.
காயமடைந்த ஐவரும் தற்போது சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மழையின் போது வீசிய பலத்த காற்று காரணமாக பல இடங்களில் மரங்கள் விழுந்து சொத்து சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கொழும்பு விஜேராம மாவத்தை, கொழும்பு ஹோர்டன் பிளேஸ், மைட்லேண்ட் பிளேஸ், கொழும்பு 02 நவம் மாவத்தை உள்ளிட்ட பல பகுதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன. இதன் காரணமாக, போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.