தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
அதன்படி, இன்று (30) இரவு 9 மணி முதல் நாளை (31) இரவு 9 மணி வரை அடுத்த 24 மணி நேரத்திற்கு எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தும் முதல் நிலை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவித்தலானது காலி மாவட்டத்தில் படதேகம, கண்டி மாவட்டத்தில் கங்கா இஹல கோரல, கேகாலை மாவட்டத்தில் அரநாயக்க, நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ மற்றும் நோர்வுட், இரத்தினபுரி மாவட்டத்தில் கிரியெல்ல போன்ற பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.