இலிங்கநகர் அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் ஆலயத்தின் புதிய பரிபாலனசபை தெரிவுக்கான பொதுக் கூட்டம் 16 ஆந் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 03.30 மணி்க்கு ஆலய பிரதம குரு சிவ பிரம்மஸ்ரீ ந.ஷண்முக சிவா சர்மா அவர்களின் ஆசியுரைபுடன் ஆரம்பமானது.
கூட்டத் தெரிவின்போது தலைவர் பொ.சற்சிவானந்தம், செயலாளர் க.வரதகுமார்,பொருளாளர் மு.சச்சிதானந்தன் உப தலைவர் கா. முருகையா, உப செயலாளர் ம.யோகமலர் ஆகியோரும்,
உறுப்பினர்களாக சு.கிருஷ்ணகுமார், இ.தேவானந்தராசா, ச.யுவராசா, ச.நந்தகுமார், செ.திசேஸ்காந்த், க.உதயேந்திரன்,
பு.சுபராஜா, ஜெ.அனோஜன் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.
மேலும் ஆலோசகராக க.நிமலநாதன், கணக்காய்வாளராக த.ராஜ்குமார் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து ஆலயம் இவ்வருடம் பாலஸ்தானம் செய்யப்பட்டு புனருத்தாரணம், கும்பாபிஷேகப் பணிகள் மேற்கொள்ளல் மற்றும் ஆன்மீக செயற்பாடுகளை முன்னெடுக்கும் பொருட்டு நிதிக் குழு, கும்பாபிஷேகக் குழு, அறநெறிக்குழு என்பனவும் அமைக்கப்பட்டது. இறுதியாக செயலாளரின் நன்றியுரையுடன் கூட்டம் இனிதே நிறைவு பெற்றமை குறிப்பிடத்தக்கது.