2025 ஐ.பி.எல் தொடரின் முதல் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் ஹர்திக் பாண்டியா விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளதால் மும்பை அணியை சூர்யகுமார் யாதவ் அல்லது ரோஹிட் சர்மா வழிநடத்த வாய்ப்புள்ளது.
கடந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரின் குரூப் ஸ்டேஜின் கடைசி போட்டியில் மும்பை அணி லக்னோ அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் மும்பை அணி மெதுவாக ஓவர்களை வீசியதற்காக, ஹர்திக் பாண்டியாவுக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதித்ததுடன், அவருக்கு 30 இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது.
ஐ.பி.எல் நடத்தை விதிகளின்படி, தொடர்ந்து மூன்று போட்டிகளில் மெதுவாக பந்துவீசியதால் ஹர்திக் பாண்டியாவுக்கு ஒரு போட்டியில் ஆட தடை விதிக்கப்பட்டது. இந்த தடையின் காரணமாகவே தற்போது சென்னை அணிக்கு எதிரான முதல் போட்டியில் ஹர்திக் பாண்டியா விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது.
ஹர்திக் இல்லாததால், முதல் போட்டியில் மும்பை அணியின் தலைவராக யார் செயற்படுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.