இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் ரி20 தொடரான ஐ.பி.எல். இன் 18ஆவது சீசன் இந்த வருடம் நடைபெறவுள்ளதுடன் 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ரோயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.
இந்த தொடருக்கான டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியின் புதிய அணித்தலைவராக அக்சர் படேல் கடந்த சில தினங்களுக்கு முன் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் டெல்லி அணியின் புதிய துணை தலைவராக பெங்களூரு அணியின் முன்னாள் தலைவரான பாப் டு பிளெஸ்சிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
டெல்லி அணி தனது முதல் ஆட்டத்தை 24 ஆம் திகதி லக்னோ சூப்பர் ஜெயண்ட்சை எதிர்கொள்கிறமை குறிப்பிடத்தக்கது.