வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று தெற்கு வேலுப்பிள்ளை செல்லம்மா இலவச கல்வி நிலையத்தின் பெயர்ப்பலகை இன்று(16) திரை நீக்கம் செய்யப்பட்டது
கல்வி நிலைய இயக்குனர் வேலுப்பிள்ளை தெய்வேந்திரா தலைமையில் இன்று முற்பகல் 10.30 மணியளவில் நிகழ்வு ஆரம்பமானது
வேலுப்பிள்ளை செல்லம்மா இலவச கல்வி நிலையத்தின் பெயர் பலகையை தாளையடி பங்குத் தந்தை யஷ்ரின் ஆதர் ஆசிர்வதித்து திரை நீக்கம் செய்துவைத்தார்
அதனை தொடர்ந்து பங்குத்தந்தையால் கல்வி நிலையம்,மாணவர்கள்,ஆசிரியர்கள் ஆசிர்வதிக்கப்பட்டனர்
இந்நிகழ்வில் தாளையடி பங்குத்தந்தை யஷ்ரின் ஆதர்,அருட்தந்தை யாக்கோப்,கவிஞர் யாழ் மருதன்,ஆசிரியர்கள்,மாணவர்கள்,பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

