யாழ்ப்பாணம் – வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரம சைவகலைப் பண்பாட்டு பேரவையின் ஏற்பாட்டில் சந்நிதியான் ஆச்சிரமத்தால் வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் நடாத்தப்படும் நிகழ்வில் இன்றைய தினம் நுண்கலைமானி கிமாலினி சுகந்தன் அவர்களின் தெய்வீக இன்னிசைக்கானம் இடம்பெற்றது.
இதில் ஹார்மோனிய இசையினை இசைக்கலாமணி நடேசு செல்வச்சந்திரன், மிருதங்க இசையினை கலாவித்தகர் க.சிவகுமார் தபேலா இசையினை வித்துவான் ப.கபிலன் ஆகியோர் வழங்கியிருந்தனர்.
இதேவேளை உதவியாக கோப்பாய் தெற்கு ஞானவைரவர் ஆலயத்தின் கோரிக்கைக்கு அமைவாக, கட்டிட கட்டுமானப் பணிக்காக ரூபா 75,000 ரூபா நிதி வழங்கிவைக்கப்பட்டது.
சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி சாதனைத் தமிழன் மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள், சந்நிதியான் ஆச்சிரம தொண்டர்கள், அடியவர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.
இதேவேளை சந்நிதியான் ஆச்சிரமத்தில் மாதாந்தம் இடம்பெறும் திருவாசக முற்போதல் நிகழ்வு இன்று காலை 7:00 மணியிலிருந்து சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் பல ஓதுவார்களுடன் இடம் பெற்றது.



