மன்னார் அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் பாடசாலை சமூகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வு இன்று வியாழக்கிழமை(13) மாலை 5.30 மணியளவில் பாடசாலை பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் திருமதி எஸ்.ஜே.பஸ்மி தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கல்வி உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்திக்கான கல்விப்பணிப்பாளர் என்.எம்.நசுமுதீன்,மற்றும் சிறப்பு விருந்தினராக மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எம்.பரந்தாமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் பள்ளி வாசல்களின் மௌலவிகள்,திணைக்கள அதிகாரிகள்,பொலிஸ் உயாரிகாரிபெற்றோர்,ஆசிரியர்கள்,பழைய மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது விசேட துஆப் பிரார்த்தனை,கஸீதா,பயான் உள்ளிட்ட நிகழ்வுகளும் இடம் பெற்றதோடு,விசேட நோன்பு திறக்கும் நிகழ்வும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.



