இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஐந்து மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது என்று தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கையானது இன்று சனிக்கிழமை மாலை 4 மணி முதல் நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி வரை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் பின்வருமாறு:-
- காலி மாவட்டம் – பத்தேகம பிரதேச செயலகப் பிரிவு
- கேகாலை மாவட்டம் – அரநாயக்க
- நுவரெலியா மாவட்டம் – அம்பகமுவ, நோர்வூட் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள்
- இரத்தினபுரி மாவட்டம் – இரத்தினபுரி பிரதேச செயலகப் பிரிவு
- கண்டி மாவட்டம் – மேல் கோரளை பிரதேச செயலகப் பிரிவு