இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரில் பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் குறித்த விசாரணைகள் ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக சர்வதேச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை குறித்த விடயத்தில் ஆலோசனைகளை கோரும் தீர்மானத்தை அங்கீகரித்ததை தொடர்ந்து இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, இஸ்ரேலினால் முழுமையாக முற்றுகையிடப்பட்டுள்ள காஸாவின் சில பகுதிகளில் உணவு, எரிபொருள் போன்றவற்றுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.