அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஏப்பிரல் மாதம் விதித்த வரிகளை தடுக்கும் உத்தரவை அமெரிக்க நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
உலக நாடுகளின் இறக்குமதிகள் மீதான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வரிகளிற்கு அமெரிக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட பொருட்களிற்கு மேலதிக வரிகளை விதிப்பது என்ற தீர்மானத்தை அறிவித்ததன் மூலம் டிரம்ப் தனது அதிகாரத்தை மீறினார் என மூவர் கொண்ட நீதிபதிகள் குழாம் அறிவித்துள்ளது.
புதிய வரிகளிற்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதியளிக்கவேண்டும் ஆனால் இது தேசிய அவசரநிலை என்பதால் தனக்கு அதற்கான அதிகாரம் உள்ளதாக டிரம்ப் தெரிவித்தார் என நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஏப்பிரல் மாதம் விடுதலை தினத்தன்று டிரம்ப் அறிவித்த புதிய வரிகளிற்கே நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சர்வதேச வர்த்தக நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கி சில மணிநேரங்களிற்குள் டிரம்ப் நிர்வாகம் மேல்முறையீட்டை தாக்கல் செய்துள்ளது.
இதன் காரணமாக இந்த விவகாரம் அமெரிக்க உச்சநீதிமன்றத்திற்கு செல்லும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
டிரம்பின் துணைத் தலைமை அதிகாரி ஸ்டீபன் மில்லர் சமூக ஊடகங்களில் நீதிமன்றத்தை விமர்சித்து எழுதினார்: “நீதித்துறை சதி கட்டுப்பாட்டை மீறிவிட்டது.”என தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகை : “தேசிய அவசரநிலையை எவ்வாறு சரியாகக் கையாள்வது என்பதைத் தீர்மானிக்க வேண்டியது தேர்ந்தெடுக்கப்படாத நீதிபதிகளின் வேலை அல்ல.என தெரிவித்துள்ளது.