பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சரின் ஆலோசகரும் பிரத்தியேக செயலாளர்
தேசிய மக்கள் சக்தியின் உயர்பீட உறுப்பினருமான கலாநிதி P.P சிவபிரகாசம் அவர்களின் ஏற்பாட்டில் மக்கள் சந்திப்பு இன்று (12) கண்டி மாவட்டம் புசல்லாவ நகரில் பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் கொளரவ சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களின் பங்குபற்றுதலுடன் இடம் பெற்றிருந்தது.
இதன்போது புசல்லாவ பிரதேச மக்கள் பலர் கலந்து கொண்டிருந்ததோடு அவ் மக்கள் எதிர்கொள்கின்ற அடிப்படை பிரச்சனைகளை அமைச்சர் அவர்களிடம் முன்வைத்திருந்தார்கள்.
அமைச்சர் அவர்கள் மக்களோடு கலந்தாலோசித்து இது சம்பந்தமாக தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுப்பதாகவும் கூறியிருந்தார்.


