நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா – பொரலந்த பகுதியில், கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ் விபத்து இன்று திங்கட்கிழமை (10) மாலை இடம்பெற்றதாகவும் கந்தபளையிலிருந்து நுவரெலியாவை நோக்கி பயணித்த கார் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது
பலத்த மழையுடன் கூடிய காலநிலை காரணமாக கார் வேக கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியிலிருந்து தேயிலை தோட்டத்தில் சுமார் 50 மீட்டர் அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது, காரில் பயணித்த 03 பேர் பலத்த காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர் .
குறித்த விதத்தினால் கார் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்