பிறேம் அறக்கட்டளையால் வள்ளுவர் மற்றும்,கலைமகள் முன்பள்ளிகளுக்கு சீருடை வழங்கிவைப்பு
விபத்து ஒன்றில் சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்த வடமராட்சி கிழக்கை சேர்ந்த பிறேம் நினைவாக பிறேம் அறக்கட்டளை ஆரம்பிக்கப்பட்டு இலங்கையின் வட,கிழக்கில் சமூக சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் அமரர்.பிறேம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இன்றைய தினம்(10) வடமராட்சி கிழக்கு மருதங்கேணி வள்ளுவர் முன்பள்ளி மற்றும் மாமுனை கலைமகள் முன்பள்ளி சிறார்களுக்கான சீருடை பிறேம் அறக்கட்டளையால் வழங்கிவைக்கப்பட்டது.


