யாழ். மாவட்டத்தில் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்து, தத்தமது கல்வித் தகுதிக்கேற்ப தொழில் தேடிக்கொண்டிருக்கும் இளைஞர், யுவதிகள் இந்த தொழிற் சந்தையை தமக்கானதாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என யாழ் மாவட்ட மேலதிக அரச அதிபர் ஸ்ரீமோகன் வலியுறுத்தியுள்ளார்.
யாழ். மாவட்ட செயலகமும் மனிதவள மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களமும் இணைந்து முன்னெடுத்த தொழிற் சந்தை நிகழ்வு இன்றையதினம் (08) யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போது இவ்வாறு வலியுறுத்திய அவர் மேலும் கூறுகையில்,
தொழில் வழங்குநர்கள் மற்றும் தொழில் தேடுவோரை ஒன்றிணைத்து இளைஞர் யுவதிகளின் தொழிற் தேடுதலுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்கும் களமாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது.
இதை எமது பகுதி தொழில் தேடுநர்கள் தமது எதிர்காலம் கருதியதாக பயன்படுத்தி வெற்றிகாண வேண்டும் எனவும் தெரிவித்தார்.







